தென்மாவட்டத்தில் விவசாயிகளுக்கான உரிமைப் போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் நாராயணசுவாமி நாயுடு அவர்கள், கோவில்பட்டி நகரில் ராமசாமி பூங்காவின் அருகிலே ஆயிரக்கணக்கான விவசாய பெருமக்களைத் திரட்டி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட அனுபவங்களை ராமசாமி அவர்கள் அற்புதமாக பேசினார். ஊரிலுள்ள மக்கள் எல்லோரும் இவரை @தலைவர் என அழைப்பார்கள். இவருடைய ஒரே மகளான வத்சலா அவர்கள், கோவை நகரிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை கணிப்பொறி பட்டம் பெற்ற பின்பு வளைகுடா நாட்டிலுள்ள கத்தார் நாட்டிற்குச் சென்று பள்ளிக்கூடத்தில் கணிப்பொறி ஆசிரியராக இருபது வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த கல்வியாளர் என்ற வரலாற்றினை படைத்த நிகழ்வு, 2015ம் வருட காலகட்டத்தில் எங்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது.
2015ம் வருடம் தொடக்கம் முதலாக உடல் நலம் பாதிப்பு அடைந்த ராமசாமி அவர்கள், 2017ம் வருடத்தின் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் புகழுடம்பு எய்தி சிவபதவி அடைந்தார். மகளான வத்சலா அவர்கள், அப்பாவுடைய இறுதிச் சடங்கு நிகழ்வுகளை சிறப்புடன் செய்தார். கோவில்பட்டி நகரிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் வலதுபுறமாக உப்பத்தூர் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் CBSE தரத்திலான பள்ளிக்கூடம் ஒன்றினை நடத்துகிறார், @வத்சலா அவர்கள்.
புகழ்பெற்ற இயக்குநரான ஏ.பி நாகராஜன் இயக்கிய திருமால் பெருமை, கந்தன் கருணை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து அற்புதமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகையான கே.ஆர்.விஜயா அவர்களுடன் உடன்பிறந்த ஒரு தங்கையின் பெயர் வத்சலா என்பதை, 2007ம் வருடம்.. சித்திரை மாதத்தில் நடந்த காளியம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவின் நிகழ்ச்சிகளை அதிக விலை மதிப்பு கொண்ட கேமராவினை கொண்டு வத்சலா அவர்கள் பதிவு செய்து கொண்டிருந்தபோது சொன்னேன். கூகுள் வலைப்பூவில் இணையதளம் தொடங்கி ஊரினைப் பற்றிய டாக்குமெண்டரி நிகழ்வுகளை செய்யலாமே..? என வத்சலா அவர்களிடம் நான் சொன்ன விசயத்தை 2011ம் வருடத்தில் ஊரினைப் பற்றிய வலைப்பூவினை வடிவமைத்து டைரி குறிப்புகளை போல எழுதத் தொடங்கியது.
புகைப்படம்: அவள் விகடன் இதழுக்காக நிகில் முருகன் எடுத்த புகைப்படம்.
No comments:
Post a Comment