Thursday, January 11, 2018

மாடத்தி அவர்களுடன்..

சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாடத்தி. தர்மர், மாரிக்காளை, லட்சுமணன், ராஜேஸ்குமார் என இவருக்கு நான்கு மகன்கள். இளையரசனேந்தல் ஊருக்குச் செல்லும் சாலையில் கிழக்கு திசை கரிசல் காட்டிலுள்ள முனீஸ்வரன் கோவிலின் பூசாரியாக இருப்பதால், மாடத்தியிடம் அருள்வாக்கு கேட்க வெளியூர்களிலிருந்து நிறைய மனிதர்கள் வருவார்கள். மாடத்தி குடும்பத்தினர் முனீஸ்வரனை அறுபது ஆண்டுகளாக பூஜித்து வந்த சமயத்தில், 1995ம் வருடங்களில் முனீஸ்வரன் கோவில் மக்களிடம் பிரபலமடையத் தொடங்கியது. 


2013ம் வருடம், திருப்பூர் குமரன் எனும் கொடிகாத்த குமரனின் நினைவு தினமாக BADA OS செயலியில் இயங்கும் மொபைலில் மாடத்தியை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அமைந்தது. இயல்பான கிராமத்து மொழியில் ஐந்து நிமிடங்கள் பல விசயங்களை பேசினார். எனது அப்பாவை பெற்றெடுத்த தாத்தா, பாட்டி இருவரும் தர்ம சிந்தனை கொண்டு பெரும் தர்மங்களை செய்து வாழ்ந்தார்கள் என்பதை ஊரிலுள்ள மாடத்தி போன்ற பெண்மணிகள் சொல்லியே அறிந்து கொள்ள முடிந்தது.