Wednesday, June 29, 2016

சாமி ஆடுறப்ப சாமி தெரியுதா..?


சாமி.. நீங்க நம்ம ஊரு கோயில் திருவிழா நடக்குறப்ப வருஷம் வருஷம் சாமி ஆடுறீங்க. கையில சூழாயுதம் வச்சிகிட்டு ஜல் ஜல்னு மணியடிக்க நடந்து வர்றீங்க. கையில உள்ள சாட்டையால உடம்புல அடிச்சி அம்மனை வரவேற்குறீங்க. இந்த நேரத்துல உங்களால அம்மனோட நிஜமான உருவத்தை பாக்க முடியுதா..? ஆமாம் சாமி.. அந்த காளியாத்தாவை எத்தனை வருஷமா பாத்துகிட்டு வர்றேன். பாக்கப்போயிதான் சாமியாடுறேன்.. முத்தாலம்மன் கோயில் பக்கம் சாமியாடி வரும்போது எந்த சாமியாவது பேசுதா..? அங்க சாமியாடி வர்றப்ப திக்கு பிரமை பிடிச்ச மாதிரி இருக்கும்.. ரத்தக் கலருல கையில சக்கரமும், சூழாயுதமும் வச்சிருக்கிற பகவானே கண்ணுக்குத் தெரியுவாரு. ஒரு நிமிஷத்துல மறைஞ்சிவாரு.. முட்டையை வீசும்போது ருத்ரதாண்டவம் ஆடுவாரு. கருப்பசாமியோ, அய்யனாரோ அவரு இல்லை. அவரு குதிரை மேல உக்காந்து சூழாயுதத்தோட இடி, மின்னலுடன் வர்ற மாதிரி தெரியும் சாமி..

உங்க கண்ணுல அந்த சாமி தெரியுறதை நானும் பாத்துருக்கேன்..
ஓம் நமசிவாய..