2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
அதிகாலைப் பொழுதில் - 15.12.14
கோவில்பட்டியிலிருந்து கிராமத்திற்கு 15 ம் எண்ணுள்ள பேருந்து ஓடுகிறது. கழுகுமலை பேரூராட்சி ஊர் வரை செல்லும். அதிகாலைப் பொழுதில் ஊருக்கு வரும்பொழுது பேருந்தின் ஓட்டுநரை புகைப்படம் எடுத்தது.
மேலப்பட்டியில் பிள்ளையார் கோயிலின் அருகே பாலம் கட்டும் வேலை நடைபெறுவதால், நடுவப்பட்டி வழியாக பேருந்து வந்தது. மைப்பாறை ஊருக்கு அருகிலுள்ள சாலையில் செல்லும்போது எடுத்த புகைப்படம்!
Wednesday, December 17, 2014
கிராமத்தின் கரிசல் காடுகளில் அதிகாலை வேளையில் உலாவச் சென்றபோது - 15.12.14 (திங்கள்)
அந்தோணி அவர்களின் புதல்வர் ரவிகுமார்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களும் காடுகளோடு பிண்ணிப் பிணைந்தவை. காடும், காடு சார்ந்த வாழ்க்கையும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப் போனவை. கிராமத்து மக்களின் குலத்தொழிலும் கூட.
குளக்காட்டாக்குறிச்சி கிராமத்தின் காடுகள், நெல்லை மாவட்டத்தின் தெற்க த்தி கரிசல் மண்ணாக காட்சியளிக்கிறது. இந்த கரிசல் மண்ணில் பருத்தி, உளுந்தம் பயிறு, பாசிப் பயிறு, மக்காச்சோளம், கருது, எள், நிலக் கடலை, எலுமிச்சை, தென்னை என்று வேளாண்மைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படு கிறது.
இந்த வருடம் பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால் வேளாண்மை நல்ல முறையில் செழிப்பாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் வேளாண்மை -யில் பலத்த நஷ்டம். தமிழ்நாடு அரசாங்கம் நெல்லை மாவட்ட விவசாயிகளு க்கு வறட்சி நிவாரண நிதி அளித்தது. இந்த வருடம் நல்ல மகசூல் ஆகப்போவ -தால், 2015 ம் ஆண்டு தை திருநாளை மக்கள் நல்ல மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
சிறு வயதில் இந்தக் காடுகளில் என் வயது சிறுவர்களுடன் ஓடியாடி விளையாடும்போது எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும். இதேபோன்று எண்ணற்ற வெள்ளைக் கொக்குகள், செங்கால் நாரைகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும். இப்போது புல்வெளிகளில் மேயும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இந்தக் காடுகளின் வழியாக செல்லும்போது கரிச்சான் குருவிகளும், சிட்டுக் குருவிகளும் கீச்சு கீச்சு என்று குரலெழுப்பி, எங்களை காட்டுக்குள் வரவேற்பதுபோல் ஒரு உணர்வு தோன்றும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் மட்டும் காட்டினுள் இல்லையென்றால் , காடே சூனியமாகத்தான் காட்சியளிக்கும். ஒவ்வொரு பறவைகளுமே நமது கிராமத்தின் மூதாதையர் -களோடு காட்டின் வயற்பரப்புகளில் வேளாண்மை செய்தபோது உறவாடியவை. இந்தப் பறைவைகளும் நமது கிராமத்தின் உறுப்பினர்கள்தான் என்று நாம் எண்ண வேண்டும். ஏதோ பறவைகள் காட்டில் உள்ளன என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பயிர்களை அழிக்கும் விட்டில் பூச்சிகள், வெட்டுக் கிளிகளை பிடித்துத்தின்று வேளாண்மைப் பயிர்களை காப்பவை சின்னஞ்சிறு கரிச்சான் குருவிகளும், சிட்டுக் குருவிகளும்தான்.
Labels:
வரலாற்று சுவடுகள்
Location:
Kulakattakurichi, India
Saturday, November 15, 2014
கிராமத்தின் குளம் மழை நீரால் நிரம்பிய வேளையில் - 22.10.14
வீடியோ காணொளி
தமிழ்நாட்டில் தீபாவளித் திருநாளுக்கு முன்பு, புயலால் இரு வாரங்கள் பெய்த கனத்த மழையால் கிராமத்தின் குளம் ஓரளவிற்கு நிரம்பியது. வலைப்பூ தொடங்கிய பிறகு முதன் முறையாக குளம் நிரம்பியதை வீடியோ காணொளி -யாக பதிவு செய்தேன்.
Tuesday, October 21, 2014
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!!
பண்டிகை என்பது குடும்ப, சமூக உறவுகளைப் பிரதிபலிக்ககூடியது. புதிய உறவுகளை ஏற்படுத்தித் தரக்கூடியது. இந்தியாவின் மாபெரும் கொண்டாட் டங்களில் ஒன்றான தீபாவளி திருநாள் இதை பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் திருவிழா. நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாக, மக்களின் மனங்களில் எல்லையற்ற மகிழ்ச்சியை உருவாக்கு கிறது. இந்த 2014 ம் ஆண்டு தீபாவளி திருநாளை குளக்கட்டாக்குறிச்சி கிராமத்து மக்களும், உலகெங்கும் வாழக்கூடிய நமது கிராமத்து மக்களும் குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடி மகிழ இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்..!!
Labels:
வாழ்த்துக்கள்!
Location:
Kulakattakurichi, India
Sunday, October 12, 2014
மாதிரி கிராமங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கும் திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் - 10.10.14
பத்திரிகை செய்தி : Click here
கிராமங்களை
வளர்ச்சி அடையச் செய்வதற்காக மாதிரி கிராமங்களை எம்.பி.க்கள் உருவாக்கும்
திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மாதிரி
கிராம திட்டம்:
கடந்த
சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய
பிரதமர் மோடி, ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா’ என்னும் மாதிரி
கிராமத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் அந்தந்த தொகுதி
எம்.பி.க்களின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பிரபல பொதுவுடைமை தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான நேற்று
தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி டெல்லியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை
தொடங்கி வைத்தார்.
அப்போது
அவர் பேசியதாவது:
கிராமங்களை மேம்படுத்த வேண்டும்:
ஒவ்வொரு
எம்.பி.யும் தனது தொகுதிக்கு உட்பட்ட 3 கிராமங்களை தேர்ந்தெடுத்து
அவற்றை மக்களின் பங்களிப்புடன் மாதிரி கிராமங்களாக மேம்படுத்தவேண்டும். அங்கு
வசிக்கும் மக்களின் அத்தனை தேவைகளை யும் நிறைவேற்றும் வகையில் அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை அவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். இதன்
மூலம் கிராமங்களை விவசாயம், கைத் தொழில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் மேம்படுத்த முடியும். முதலில் 2016–ம் ஆண்டுக்குள் ஒரு எம்.பி. தனது தொகுதியில் இதுபோன்ற ஒரு மாதிரி
கிராமத்தை உருவாக்கவேண்டும். 2019–க்குள் மேலும் 2 மாதிரி கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மேம்படுத்த வேண்டும்.
2500
கிராமங்கள் வளர்ச்சியடையும்:
நம்மிடம்
சுமார் 800
எம்.பி.க்கள் இருக்கிறார்கள். 2019–ம்
ஆண்டுக்குள் நாம் ஒவ்வொரு தொகுதியிலும் 3 மாதிரி கிராமங்களை
உருவாக்கினால் நாடு முழுவதும் சுமார் 2,500 கிராமங்களை வளர்ச்சியடையச்
செய்து அவற்றை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்கி விடலாம். இந்த
திட்டத்தில் மாநில அரசுகளும் பங்கேற்று தொகுதி எம்.எல்.ஏ.க்களும் மாதிரி
கிராமங்களை உருவாக்கினால் மேலும் 7 ஆயிரம் கிராமங்களை வளர்ச்சி
அடையச் செய்யலாம்.
சொந்த
ஊர் கூடாது:
2019–க்குப் பின்பு 2024–ம் ஆண்டு வரை எம்.பி.க்கள்
தங்களது தொகுதிகளில் மேலும் 5 மாதிரி கிராமங்களை உருவாக்கி
அவற்றை வளர்ச்சி அடையச் செய்து விட முடியும். இப்படி
ஒரு பகுதியில் ஒரு மாதிரி கிராமம் உருவாகி விட்டால் தங்களது பகுதியிலும் அதேபோல
ஒரு கிராமம் உருவாகவேண்டும் என்கிற எண்ணம் அப்பகுதியில் உள்ள மற்ற மக்களிடம்
ஏற்படும். இதனால் இந்த கிராமங்களும் வளர்ச்சி அடையும் நிலை உருவாகும். இத்திட்டம்
தூய்மையான அரசியலுக்கான வாசல்களைத் திறக்கும். எம்.பி.க்கள்
தங்கள் விரும்பும் கிராமத்தை தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கான திட்டத்தை
உருவாக்க லாம். இதில் ஒரேயொரு நிபந்தனை, அந்த கிராமம் எம்.பி.யின்
சொந்த ஊராகவோ, அவர்கள் திருமண சம்பந்தம் செய்து கொண்ட ஊராகவோ
இருக்கக் கூடாது.
வாரணாசியில்
தேர்ந்தெடுப்பேன்:
மாதிரி
கிராம திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் நானும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்க
இருக்கிறேன். விரைவில் அங்கு சென்று எந்த கிராமத்தை தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை
நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிப்பேன். இதுபோல, மாதிரி
கிராமங்களை உருவாக்குவதால் நாம் கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிலைமை
மாறி கிராமங்கள் நமது தேவையை நிறைவேற்றும் நிலைமை உருவாகி விடும். கிராமத்தில்
இருக்கும் ஒவ்வொருவரும் நமது கிராமம் மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்கும் சூழலை
ஏற்படுத்தவேண்டும். இதுபோன்ற மாதிரி கிராமங் களை உருவாக்குவதன் மூலம் ஏழ்மை
நிலையில் உள்ள கிராம மக்கள் வறுமையில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறாக பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
Labels:
வரலாற்று சுவடுகள்
Location:
Kulakattakurichi, India
Monday, October 6, 2014
ஹிந்து தமிழ் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்..!!
நாடே இப்போது குடிநோயாளியாகிவிட்டது. மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகி விட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்.
அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடி நோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்திதான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதியவற்றின் சாரத்தைத்தான் மேலே பார்த்தீர்கள்.
சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், ஒட்டு மொத்தச் சமூகமும் கைகோக்க வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி நீட்டப்பட்ட கைகளுள் ஒன்றுதான் இந்தத் தொடர்.
தமிழகத்துக் இது இருண்ட காலம்! மிகைப்படுத்தவில்லை. சுமார் பத்தாண்டு
களுக்கு முன்பு, பூட்டியிருக்கும் கடைக்கு முன்பாக யாரும் காத்திருந்து குடித்ததில்லை என்பதையும், இன்று அதிகாலையிலேயே அல்லாடுகிறார் களே என்பதையும் யோசித்துப் பாருங்கள்..!!
தமிழக மக்கள்தொகையான ஏழு கோடி பேரில் குடிநோயால் பாதிக்கப்பட்டவர் கள் சுமார் ஒரு கோடிப் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், குடிநோயாளி கள் அந்த ஒரு கோடிப் பேர் மட்டும்தானா? குடிநோய் என்பது குடும்ப நோய், சமூக நோய். குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் குடிநோயாளிகளை மட்டும் கொண்டு கணக்கிடக் கூடாது. குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் நபர்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஒரு நபர் குடிப்பதால், அவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக..!!
என்ன நடக்கிறது இங்கே?
யார் காரணம் இதற்கெல்லாம்?
மதுவின் பிடியிலிருந்து நம் தமிழகத்தை மீட்க என்ன செய்யப் போகிறோம் நாம்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் பயணம் இது..!!
வரும் வாரம் முதல்...
திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் நடுப்பக்கங்களில்..
காத்திருங்கள்..!!
இப்படியாக 02.10.14 காந்தி ஜெயந்தி நாளன்று, ஹிந்து தமிழ் நாளிதழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இன்றைய தினம் முதல் கட்டுரையை படித்தபோது அற்புதமாக இருந்தது. நமது கிராமத்து வலைப்பூவில் மதுவால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை, எனது தந்தையாரின் வாழ்க்கையிலிருந்தே பிரதிபலித்திருந் தேன். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கதையாக எழுதியிருந்தேன். அதேபோல், கிராமத்துப் பெயரில் இருக்கும் முகநூலிலும் மதுவின் தீமையைக் குறித்து எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருந்தேன். கிராமத்து வலைப்பூவில் நான் எழுதும் கட்டுரைகளை ஹிந்து இதழுக்கு மின்னஞ்சலில் அனுப்பிக் கொண்டே இருப்பேன். இன்றைய தினத்தில் வலைப்பூ உருவாக்கிய நாளிலிருந்து இலட்சம் முகவரிகளுக்கு மின்னஞ்சல் செய்திருப்பேன். என்னுடைய தந்தையாரின் இறுதி நாட்கள் என்ற கட்டுரைக்கு ஹிந்து தமிழ் நாளிதழ் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். நானும் முத்தாய்ப்பாக மதுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து, தொடர் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன். என்னுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்ட்டனவா? இல்லையா? என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஹிந்து குழுமம் வாசகர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறது என்பதை மேற்கண்ட அறிவிப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். இதற்கு முன்பு 'வேர்களைத் தேடி' என்ற அற்புதமான தொடரை எழுத்தாளர் சமஸ் அவர்கள் எழுதினார். அற்புதமாக கடலோர மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தார். எழுத்தாளர் ஜே.டி.குரூஸ் அவர்கள் எழுதிய 'ஆழி சூழ் உலகு', "கொற்கை" என்ற இரண்டு நாவல்கள், தமிழ் இலக்கிய உலகில் சமீபத்திய பிரமாண்டமான படைப்புகள். இந்த இரண்டு நாவல்களின் தாக்கமும் 'வேர்களைத் தேடி' கட்டுரையில் இருந்தது. இனிவரும் நாட்களில் ஹிந்து தமிழ் நாளிதழில் மதுவால் ஏற்படும் சமூக சீரழிவைக் குறித்து எழுதப்படும் கட்டுரையும் நல்லதொரு வரவேற்பை பெரும்..!!

Thursday, October 2, 2014
அக்டோபர் 2, 2014 - காந்தி ஜெயந்தி தினம்
இங்கிலாந்து நாட்டுல லண்டனுக்கு போயி வழக்கறிஞர் படிப்புல பட்டம் வாங்கி, தென்னாப்பிரிக்கா நாட்டுல இந்தியர்களோட உரிமைகளுக்காக போராடி, திரும்ப இந்திய நாட்டுக்கு வந்து சுதந்திரத்துக்காக போராடி, இலட்சக் கணக்கான மக்களோட ஆன்மாவை தட்டி எழுப்புனதுல காந்திஜிக்கு அளப்பரிய பங்கு இருக்குது.
தன்னோட வாழ்க்கையையே பாரத தேசத்துக்காக அர்பணிச்சவரு. சமீப நான்கு வருடங்கள்ல காந்திஜியைப் பத்தி சில புத்தகங்களை படிச்சேன். எழுத்தளார் ராமச்சந்திர குஹா எழுதுன 'காந்தி ஆப்டர் இந்தியா', காந்தியின் கடைசி இருநூறு நாட்கள், நள்ளிரவில் சுதந்திரம், எழுத்தாளர் ஜெயமோக னோட 'இன்றைய காந்தி', எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோட 'காந்தியோடு பேசுவேன்' போன்ற புத்தகங்களை படிச்சப்ப கண்ணுல இருந்து கண்ணீர்தான் வந்துச்சு. பத்து வருசத்துக்கு முன்னாடியே காந்தியோட சுயசரிதை நூலான 'சத்திய சோதனை' புத்தகத்தை படிச்சிருந்தேன்.
2002 ம் வருஷம் ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோவோட 'காந்தி' படத்தை பாத்தப்ப, எல்லை யில்லாத உணர்ச்சிப் பிழம்பு மனசுல உருவாகிச்சு. அதுக்குப் பிறகு காந்தி படத்தை மட்டும் பத்து தடவை பாத்தேன். ஒவ்வொரு தடவை பாக்கும்போதும் புதிய புதிய வாழ்க்கை அனுபவமா இருந்துச்சு. இப்பேற்பட்ட மகான் வாழ்ந்த காலத்துல நாம வாழ முடியாம போச்சேன்னு நினைச்சேன். இந்த காந்தி சினிமா படம், நான் இந்த பூமியில பிறந்த வருசமான 1982 வருஷம் நவம்பர் 30 ந் தேதி அன்னைக்கு உலகம் முழுவதும் திரையரங்குல வெளியாகி, மிகப்பெரிய அளவுல அதிர்வு அலைகளை உண்டாக்கி இருக்குது. இன்னைக்கு வரைக்கும் காந்தி மகானைப் பத்தி தெரிஞ்சிகிடுறதுக்கு ஒரு மாபெரும் காவியமுன்னு கூட சொல்லலாம்.
உலக அளவுல ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் உருவாகுறதுக்கு,
இந்த 'காந்தி' சினிமா படம் காரணமா இருந்துருக்கு. பல நாடுகள்ல காந்தி மகானோட அகிம்சையும், சத்திய சோதனையும் பின்பற்றப்பட்டு வருது. பல உலக நாடுகள்ல இருக்குற பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாடி, காந்தி மகானோட சிலையை வச்சிருக்காங்க. லண்டன் மாநகருலயும், அமெரிக்கா வோட வெள்ளை மாளிகை முன்னாடியும் மகாத்மா காந்தியோட சிலை இருக்குது. உலகம் முழுவதும் காந்தி தாத்தாவோட கொள்கைகள் ஜெயிச்சிரு க்குது. இந்திய தேசத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான்னு சொன்னவரு. கிராமப்புற முன்னேற்றம் இல்லாம, பாரத தேசத்துல வளர்ச்சி இருக்காதுன்னு ஆணித்தரமா சொன்னவரு. தீண்டாமை கொடுமைக்கு எதிரா போராடுனவரு. அரிஜன மக்களுக்காக தன்னையே அர்பணிச்சவரு. இந்திய நாட்டோட சுதந்திரத்துக்காக பத்து வருடங்களுக்கு மேல சிறையில துன்பங்களை அனுபவிச்சவரு. இப்படி நம்ம தலைமுறைகள் நலமா வாழனுமுன்னு, தன்னோட வாழ்க்கையையே தியாகம் பண்ண, மகாத்மா காந்தியோட பிறந்த நாளனா இன்னைக்கு, அவரோட கொளகைகளை நாம பின்பற்றி பாரத தேசத்தை உலக நாடுகள் மத்தியில உன்னதமான தேசமா மாத்துறதுக்கு, உறுதிமொழி எடுத்துக்குவோம். வந்தே மாதரம்..!! வந்தே மாதரம்..!! பாரத் மாதாகி ஜே..!! சத்ய மேவ ஜெயதே..!!
Labels:
வரலாற்று சுவடுகள்
Location:
Kulakattakurichi, India
Saturday, August 16, 2014
ராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவு நாள்..
Labels:
ஆன்மீகம்
Location:
Belur, Howrah, West Bengal, India
Monday, July 7, 2014
ஹிந்து தமிழ் நாளிதழுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்..!!
மனித இனத்தின் நாகரிக வரலாற்றைத் தொடங்கும்போது நாம் அங்கிருந்துதான் தொடங்குகிறோம். நீரிலிருந்தும் நிலத்திலிருந்தும் வானத்திலிருந்தும். நாம் எல்லோருமே அங்கிருந்துதான் வந்திருக்கிறோம். நம் அனைவரின் வேர்களையும் தேடிப் பார்த்தால், மண்ணின் பிளவுகள் கடைசியில் நம்மைக் கொண்டுசேர்க்கும் இடம் ஒரு வனவாழ் சமூகத்திலோ, கடலோடி சமூகத்திலோதான் முடியும். ஆனால், இன்றைக்கு நாம் எங்கே இருக்கிறோம்..? நம்முடைய அடையாளம் என்ன? நாம் வந்த இடத்துக்கும் நமக்குமான தொடர்பு என்ன? நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய வேர்களை, தொல்குடிச் சமூகங்களை எந்த அளவுக்குத் தெரியும்? அவர்களுடைய இன்றைய வாழ்க்கைப்பாட்டின் நிலை எந்த அளவுக்குப் புரியும்? எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, பாதுகாப்பான, மேம்பட்ட ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டதாக நினைக்கிறோம். கடலிலும் வயலிலும் காட்டிலும் என்ன நடந்தாலும் அது எங்கோ யாருக்கோ நடப்பதாக நினைத்து நகர்கிறோம். ஆனால், உண்மையான நிலை என்ன? நம் வேர்களை நோக்கிச் செல்லும் பயணம் இது. அடுத்த சில மாதங்களுக்கு, "நீர், நிலம், வனம்" தொடர் மூலமாக உங்களோடு கரம் கோர்த்து, தமிழ் மண்ணின் ஆதிகுடி சமூகங்களை நோக்கிச் செல்கிறது தி இந்து நாளிதழ். திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்தும், அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி விட்டும் "நீர், நிலம், வனம்" தொடர் வெளியாகும். பயணத்தை நீரிலிருந்து தொடங்குவோம். முதலில் கடல், அடுத்து வயல், பிறகு வனம்..!!
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குப் புறப்படுவோமா..?
இப்படியாக ஒரு விளம்பரத்தை ஹிந்து தமிழ் நாளிதழ் இன்று வெளியிட்டு ள்ளது. ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியான நாளிலிருந்து தீவிர வாசகனாக இருக்கிறேன். கடந்த ஒரு வருடங்களாக கிராமத்து வலைப்பூவின் கட்டுரை களை எழுத எழுத, மின்னஞ்சலில் ஹிந்து நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவேன். சமீபத்தில் கிராமத்திற்கு மதநல்லிணக்க விருது கிடைத்தவுடன், எனக்கு வாழ்த்துக்களைக் கூறி ஹிந்து நிறுவனத்தார் மின்னஞ்சல் அனுப்பினார்கள். உங்கள் நாளிதழில் தரமான கட்டுரைகளை பிரசுரம் செய்கிறீர்கள். கிராமங்க ளில் வாழும் விவசாயப் பெருமக்கள், ஏழைக் குடியானவர்களைப் பற்றிக் கட்டுரைகளை பிரசுரம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று இரண்டு நாளைக்கு ஒரு முறை மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தேன். மாதம் ஒரு முறை கடிதம் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்குப் பலன் இன்றுதான் கிடைத்ததாக நினைத்துக் கொண்டேன். அதிலும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குப் புறப்படுவோமா? என்று விளம்பரப்படுத்தி யது வியப்பாக இருந்தது. பத்திரிகை வரலாற்றில் இப்படியொரு அறிவிப்பு வருவது இதுதான் முதல்முறை. ராமகிருஷ்ண பரமஹம்சரின் புதல்வர் சுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த இமாலய வெற்றி!! இந்த நூற்றாண் டில் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பவிருக்கும் இமாலயப் பேரலையின் மற்றொரு சிறு அலை, இப்போது ஹிந்து தமிழ் நாளிதழ் வழியாக உருவாக இருக்கிறது. சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல், இந்த நூற்றாண்டில் தினம் தினம் எனது கிராமத்து வலைப்பூவும் ஆன்மீக அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..!!

Wednesday, June 11, 2014
சிறந்த கிராமத்திற்கான சமூக நல்லிணக்க விருது..
நேற்று காலை வேளை.. நண்பன் கண்ணன் மொபைலில் அழைத்து திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த சமூக நல்லிணக்க கிராமம் என்ற விருதினை கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 485 கிராமங்களில், நமது ஊரான குளக்கட்டாக்குறிச்சி சிறந்த சமூக நல்லிணக்க விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு 09.06.2014 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் அவர்களிடம், நமது ஊரின் பஞ்சாயத்து தலைவர் பத்து லட்சத்திற்கான பரிசுத் தொகையை பெற்றார் என்ற தகவலை சொன்னபோது.. எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது. தினமணி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இணையத்தில் திருநெல்வேலி பதிப்பில் செய்தியை கண்டு மகிழ்ச்சியானது. இந்த விருது ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் கிடைத்த அங்கீகாரம். நமது ஊர் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பு பாலசுப்பிரமணியம் அவர்களை மொபைலில் அழைத்து வாழ்த்துக்களை சொன்னது. சிறு வயதிலிருந்தே நீண்ட கால நண்பர். இவருடைய துணைவியார் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதம் பின்பு கிராமத்தின் மேம்பாடு குறித்து சில விசயங்களை பகிர்ந்து கொண்டேன். அதில் ஒன்றுதான் கிராமத்து வலைப்பூ.
அனைவருக்கும் இனிய வைகாசி விசாக திருநாள் வாழ்த்துக்கள்.
பத்திரிகை செய்தி : Click here
தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி - 10.06.14 - செவ்வாய்
தீண்டாமை இல்லாத மத நல்லிணக்க கிராமமாக
குளக்கட்டாக்குறிச்சிக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசு..
தீண்டாமையை கடைபிடிக்காத சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி ஊர் தேர்வு செய்யப்பட்டு பத்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. குடிநீர், பாதை வசதி, பள்ளிக் கூடங்கள் சீரமைப்பு, குழந்தைகள் நல மையம் கட்டுதல், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்தல், புதிதாக விளக்குகள் அமைத்தல் போன்ற மக்கள் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் செழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குளக்கட்டாக்குறிச்சி கிராமம் - குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில் தாலுகா - கழுகுமலையிலிருந்து 8 கீ.மீ - கோவில்பட்டியிலிருந்து 18 கீ.மீ - பாரம்பரியமான விவசாயத் தொழிலை நம்பி வாழும் கிராமம்... ஜனநாயகம் உலாவும் கிராமம்..!! மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய கிராமத்து மண் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இந்த கிராமத்து வலைப்பூ..

Thursday, May 1, 2014
செம்மறி ஆடுகளை மேய்க்கும் இளைஞனுடன் ஒரு காலைபொழுது..
நாகரிகத்தைக் கண்டெடுத்து
கொடுத்த நாமே
கண்டபடி பேசலாமா.?
என்ன பேசினாங்க?
என்ன பேசினாங்களா..?
என்னென்னவோ பேசுறாங்க.
போடா.. கூழு குடிச்ச பயலே.!
போடா.. குந்தக் குடிசையில்லாத பயலே.!
போடா..பொறம்போக்கு.!
நீயெல்லாம்...
ஆடு மேய்க்கத்தான் லாயக்கு..
மாடு மேய்க்கத்தான் லாயக்கு..
யாரு யாரைப் பாத்து பேசுறது..?
தன்னோடு பிறந்த தன் இனத்தை
தன் இனமே பேசுறது..
கூழ் உணவு என்ன மட்டமான உணவா..?
ஆனந்த விகடனில் தொடராக வெளிவரும்
ஆறாம் திணையை
ஆறு முறை படிச்சிட்டு
அப்புறமா சொல்லுங்க.
குளக்கட்டாக்குறிச்சி ஊரில் பிறந்து வளர்ந்து என்னுடன் பால்ய காலம் வயது முதலாக பழகிய நண்பன் வெங்கடேஷ். ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை படித்து முடித்த பின்பு அப்பா செல்லையாவின் உத்தரவுக்கு இணங்க கருப்பு, வெள்ளை ஆடுகள் இவற்றுடன் செம்மறி ஆடுகளையும் மேய்க்கும் மகத்தான மேய்ச்சல் பணிக்கு வாழ்நாள் முழுமைக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
நம்ம இனம் நம்ம மண்ணுல
இலவச மனைப் பட்டாவை கேட்டு
இன்னும் அலையுதேங்குற
தவிப்பு நெருப்பை இன்னும்..
இங்க பத்த வைக்க முடியலேன்னா..
அப்புறம் எதுக்கு இந்த அரசியல் வெங்காயம் எல்லாம்..?
ஆடு, மாடு மேய்ச்சவங்களோட அந்த
அனுபவங்களில் தானுங்க
பண்பாடு பதப்பட்டது.
வாழ்க்கை அழகானது.
அவங்க அதிகமா பயன்படுத்தின
அழகான ஒரு தூய மொழியை
நாம எவ்வளவு எளிமையா
கொச்சை செய்துவிட்டோம்.
எப்படி..?
எப்படியா..?
'விசிலடிச்சான் குஞ்சுகள்'னு..
அந்த ஒலி ஒண்ணும்
அர்த்தமற்ற இரைச்சலுக்கானது இல்லைங்க.
அது..
குறிஞ்சியிலும் முல்லையிலும்
தாங்கள் எங்கெங்கோ இருக்கிறோம்
எங்கே வந்துகொண்டிருக்கிறோம் என்பதை
தூரங்களை மீறி
காட்டு அம்புகளை மீறி
தெரிவித்துக் கொள்கிற
குறியீட்டு மொழி.
அடையப்போட்ட ஆடுகளில்
ஒன்று எழுந்து
ஒழுங்கீனம் செய்ய முற்பட்டால்
இந்த மொழிதான் போய்,
மொத்த ஆட்டுக் கூட்டத்தையும்
முறை செய்யும்.
நள்ளிரவு.. இடி மின்னலுடன் மழைத்தூறல்..
உறி, பானை, தோற்படுக்கை, இவற்றோடு
ஒற்றைக்காலில் ஒரு காலை தண்டில் ஊற்றி
நனைந்தபடி நிற்கும் அந்த இடையர்,
ஒலிக் குறிப்புகளாலேயே
தன்னுடைய பட்டி ஆடுகளுக்கு வர இருக்கிற
ஆபத்தினை அறிந்து
சீழ்க்கையொலி இசைக்கிறார்.
அந்த ஒலி விரைவாகப் போய்
குட்டி ஆடுகளைத் தூக்கப்போக வந்திருக்கும்
குறு நரியைத் திடுக்கிடவைத்து
முள் நிறைந்த புதருக்குள்
விரட்டி விட்டுத் திரும்புகிறது.
உயிர் காத்த அந்த சீழ்க்கை,
வீளை என்ற மொழியை
இனி... தவறான பொதுக் கருத்தில்
கொச்சை செய்து விடாதீர்கள்.
அது, அந்த மொழியைக் கண்டெடுத்து
நமக்குத் தந்த குறிஞ்சி, முல்லை எனும் மூத்தோரை
அவமதிப்பதாக ஆகிவிடும்.
திண்கால் உறியன், பானையன், அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவீடு வீளை கடிதுசென்று இசைப்பத்
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குருந்தூறு இரியப் போகும்.
--இடைகடனார், அகநானூறு - 274, திணை - முல்லை.

குறிப்புகள்
Location:
Kulakattakurichi,Tamil Nadu,India
Tuesday, January 21, 2014
வேளாண்மை சாகுபடி பயிர்கள்..
கடந்த வருடத்தில்(2013) கடைசியாக பெய்ய வேண்டிய ஒரு பருவ மழை பெய்யாமல் போன சூழலில் வேளாண்மை சாகுபடி பெரிய நஸ்டத்தை சந்தித்த வேளை, 2014ம் வருடம் வருகை தந்த தை திருநாளில் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி கிராமமே அமைதியாக இருந்தது.
2014, ஜனவரி 13 அன்று காலை வேளை எடுத்த புகைப்படங்கள்..
சூரியகாந்தி பயிரிடப்பட்டு நன்றாக வளர்ந்திருந்தது.
பருத்தி பயிரிடப்பட்டு காய்கள் உற்பத்தியான நடுநிலை பருவம்.
Friday, January 10, 2014
Subscribe to:
Posts (Atom)