Saturday, August 16, 2014

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவு நாள்..


2014ம் வருடம், ஆகஸ்ட் 16 சனிக்கிழமை.. சுவாமி விவேகானந்தரை உலகிற்கு அடையாளம் காட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சரின் 128ம் ஆண்டு நினைவு நாள். 1886ம் வருடம், ஆகஸ்ட் 16ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். மகான்களுக்கு இந்த பூவுலகில் இறப்பு என்பது கிடையாது. அவர்கள் தங்களுடைய ஆன்மீக பலத்தால் இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தையே வென்றவர்கள். சிவபதவி அடைந்து பல வருடங்களாகியும் காலத்தால் அழியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகான்களின் வயது ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் வாழ்ந்த மகத்தான வாழ்க்கையால் நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த வலிமை படைத்த விவேகானந்தர் எனும் இளைஞரை உலகிற்கு அடையாளம் காட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சரே.. உங்களுடைய புகழ் ஜெகமெங்கும் ஓங்குக.. ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment