Thursday, October 2, 2014

அக்டோபர் 2, 2014 - காந்தி ஜெயந்தி தினம்


நம்ம இந்திய நாடு சுதந்திரம் வாங்குறதுக்கு ஆங்கிலேயர்கள்கிட்ட போராடுன ஆயிரக்கணக்கான மனிதர்கள்ல மகாத்மா காந்திஜி ஒரு மகத்தான மனிதர்.
இங்கிலாந்து நாட்டுல லண்டனுக்கு போயி வழக்கறிஞர் படிப்புல பட்டம் வாங்கி, தென்னாப்பிரிக்கா நாட்டுல இந்தியர்களோட உரிமைகளுக்காக போராடி, திரும்ப இந்திய நாட்டுக்கு வந்து சுதந்திரத்துக்காக போராடி, இலட்சக் கணக்கான மக்களோட ஆன்மாவை தட்டி எழுப்புனதுல காந்திஜிக்கு அளப்பரிய பங்கு இருக்குது. 

தன்னோட வாழ்க்கையையே பாரத தேசத்துக்காக அர்பணிச்சவரு. சமீப நான்கு வருடங்கள்ல காந்திஜியைப் பத்தி சில புத்தகங்களை படிச்சேன். எழுத்தளார் ராமச்சந்திர குஹா எழுதுன 'காந்தி ஆப்டர் இந்தியா', காந்தியின் கடைசி இருநூறு நாட்கள், நள்ளிரவில் சுதந்திரம், எழுத்தாளர் ஜெயமோக னோட 'இன்றைய காந்தி', எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோட 'காந்தியோடு பேசுவேன்' போன்ற புத்தகங்களை படிச்சப்ப கண்ணுல இருந்து கண்ணீர்தான் வந்துச்சு. பத்து வருசத்துக்கு முன்னாடியே காந்தியோட சுயசரிதை நூலான 'சத்திய சோதனை' புத்தகத்தை படிச்சிருந்தேன். 

2002 ம் வருஷம் ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோவோட 'காந்தி' படத்தை பாத்தப்ப, எல்லை யில்லாத உணர்ச்சிப் பிழம்பு மனசுல உருவாகிச்சு. அதுக்குப் பிறகு காந்தி படத்தை மட்டும் பத்து தடவை பாத்தேன். ஒவ்வொரு தடவை பாக்கும்போதும் புதிய புதிய வாழ்க்கை அனுபவமா இருந்துச்சு. இப்பேற்பட்ட மகான் வாழ்ந்த காலத்துல நாம வாழ முடியாம போச்சேன்னு நினைச்சேன். இந்த காந்தி சினிமா படம், நான் இந்த பூமியில பிறந்த வருசமான 1982 வருஷம் நவம்பர் 30 ந் தேதி அன்னைக்கு உலகம் முழுவதும் திரையரங்குல வெளியாகி, மிகப்பெரிய அளவுல அதிர்வு அலைகளை உண்டாக்கி இருக்குது. இன்னைக்கு வரைக்கும் காந்தி மகானைப் பத்தி தெரிஞ்சிகிடுறதுக்கு ஒரு மாபெரும் காவியமுன்னு கூட சொல்லலாம். 

உலக அளவுல ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் உருவாகுறதுக்கு,
இந்த 'காந்தி' சினிமா படம் காரணமா இருந்துருக்கு. பல நாடுகள்ல காந்தி மகானோட அகிம்சையும், சத்திய சோதனையும் பின்பற்றப்பட்டு வருது. பல உலக நாடுகள்ல இருக்குற பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாடி, காந்தி மகானோட சிலையை வச்சிருக்காங்க. லண்டன் மாநகருலயும், அமெரிக்கா வோட வெள்ளை மாளிகை முன்னாடியும் மகாத்மா காந்தியோட சிலை இருக்குது. உலகம் முழுவதும் காந்தி தாத்தாவோட கொள்கைகள் ஜெயிச்சிரு க்குது. இந்திய தேசத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான்னு சொன்னவரு. கிராமப்புற முன்னேற்றம் இல்லாம, பாரத தேசத்துல வளர்ச்சி இருக்காதுன்னு ஆணித்தரமா சொன்னவரு. தீண்டாமை கொடுமைக்கு எதிரா போராடுனவரு. அரிஜன மக்களுக்காக தன்னையே அர்பணிச்சவரு. இந்திய நாட்டோட சுதந்திரத்துக்காக பத்து வருடங்களுக்கு மேல சிறையில துன்பங்களை அனுபவிச்சவரு. இப்படி நம்ம தலைமுறைகள் நலமா வாழனுமுன்னு, தன்னோட வாழ்க்கையையே தியாகம் பண்ண, மகாத்மா காந்தியோட பிறந்த நாளனா இன்னைக்கு, அவரோட கொளகைகளை நாம பின்பற்றி பாரத தேசத்தை உலக நாடுகள் மத்தியில உன்னதமான தேசமா மாத்துறதுக்கு, உறுதிமொழி எடுத்துக்குவோம். வந்தே மாதரம்..!! வந்தே மாதரம்..!! பாரத் மாதாகி ஜே..!! சத்ய மேவ ஜெயதே..!!

No comments:

Post a Comment