பத்திரிகை செய்தி : Click here
கிராமங்களை
வளர்ச்சி அடையச் செய்வதற்காக மாதிரி கிராமங்களை எம்.பி.க்கள் உருவாக்கும்
திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மாதிரி
கிராம திட்டம்:
கடந்த
சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய
பிரதமர் மோடி, ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா’ என்னும் மாதிரி
கிராமத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் அந்தந்த தொகுதி
எம்.பி.க்களின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பிரபல பொதுவுடைமை தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான நேற்று
தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி டெல்லியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை
தொடங்கி வைத்தார்.
அப்போது
அவர் பேசியதாவது:
கிராமங்களை மேம்படுத்த வேண்டும்:
ஒவ்வொரு
எம்.பி.யும் தனது தொகுதிக்கு உட்பட்ட 3 கிராமங்களை தேர்ந்தெடுத்து
அவற்றை மக்களின் பங்களிப்புடன் மாதிரி கிராமங்களாக மேம்படுத்தவேண்டும். அங்கு
வசிக்கும் மக்களின் அத்தனை தேவைகளை யும் நிறைவேற்றும் வகையில் அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை அவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். இதன்
மூலம் கிராமங்களை விவசாயம், கைத் தொழில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் மேம்படுத்த முடியும். முதலில் 2016–ம் ஆண்டுக்குள் ஒரு எம்.பி. தனது தொகுதியில் இதுபோன்ற ஒரு மாதிரி
கிராமத்தை உருவாக்கவேண்டும். 2019–க்குள் மேலும் 2 மாதிரி கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மேம்படுத்த வேண்டும்.
2500
கிராமங்கள் வளர்ச்சியடையும்:
நம்மிடம்
சுமார் 800
எம்.பி.க்கள் இருக்கிறார்கள். 2019–ம்
ஆண்டுக்குள் நாம் ஒவ்வொரு தொகுதியிலும் 3 மாதிரி கிராமங்களை
உருவாக்கினால் நாடு முழுவதும் சுமார் 2,500 கிராமங்களை வளர்ச்சியடையச்
செய்து அவற்றை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்கி விடலாம். இந்த
திட்டத்தில் மாநில அரசுகளும் பங்கேற்று தொகுதி எம்.எல்.ஏ.க்களும் மாதிரி
கிராமங்களை உருவாக்கினால் மேலும் 7 ஆயிரம் கிராமங்களை வளர்ச்சி
அடையச் செய்யலாம்.
சொந்த
ஊர் கூடாது:
2019–க்குப் பின்பு 2024–ம் ஆண்டு வரை எம்.பி.க்கள்
தங்களது தொகுதிகளில் மேலும் 5 மாதிரி கிராமங்களை உருவாக்கி
அவற்றை வளர்ச்சி அடையச் செய்து விட முடியும். இப்படி
ஒரு பகுதியில் ஒரு மாதிரி கிராமம் உருவாகி விட்டால் தங்களது பகுதியிலும் அதேபோல
ஒரு கிராமம் உருவாகவேண்டும் என்கிற எண்ணம் அப்பகுதியில் உள்ள மற்ற மக்களிடம்
ஏற்படும். இதனால் இந்த கிராமங்களும் வளர்ச்சி அடையும் நிலை உருவாகும். இத்திட்டம்
தூய்மையான அரசியலுக்கான வாசல்களைத் திறக்கும். எம்.பி.க்கள்
தங்கள் விரும்பும் கிராமத்தை தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கான திட்டத்தை
உருவாக்க லாம். இதில் ஒரேயொரு நிபந்தனை, அந்த கிராமம் எம்.பி.யின்
சொந்த ஊராகவோ, அவர்கள் திருமண சம்பந்தம் செய்து கொண்ட ஊராகவோ
இருக்கக் கூடாது.
வாரணாசியில்
தேர்ந்தெடுப்பேன்:
மாதிரி
கிராம திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் நானும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்க
இருக்கிறேன். விரைவில் அங்கு சென்று எந்த கிராமத்தை தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை
நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிப்பேன். இதுபோல, மாதிரி
கிராமங்களை உருவாக்குவதால் நாம் கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிலைமை
மாறி கிராமங்கள் நமது தேவையை நிறைவேற்றும் நிலைமை உருவாகி விடும். கிராமத்தில்
இருக்கும் ஒவ்வொருவரும் நமது கிராமம் மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்கும் சூழலை
ஏற்படுத்தவேண்டும். இதுபோன்ற மாதிரி கிராமங் களை உருவாக்குவதன் மூலம் ஏழ்மை
நிலையில் உள்ள கிராம மக்கள் வறுமையில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறாக பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
No comments:
Post a Comment