நாடே இப்போது குடிநோயாளியாகிவிட்டது. மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகி விட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்.
அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடி நோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்திதான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதியவற்றின் சாரத்தைத்தான் மேலே பார்த்தீர்கள்.
சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், ஒட்டு மொத்தச் சமூகமும் கைகோக்க வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி நீட்டப்பட்ட கைகளுள் ஒன்றுதான் இந்தத் தொடர்.
தமிழகத்துக் இது இருண்ட காலம்! மிகைப்படுத்தவில்லை. சுமார் பத்தாண்டு
களுக்கு முன்பு, பூட்டியிருக்கும் கடைக்கு முன்பாக யாரும் காத்திருந்து குடித்ததில்லை என்பதையும், இன்று அதிகாலையிலேயே அல்லாடுகிறார் களே என்பதையும் யோசித்துப் பாருங்கள்..!!
தமிழக மக்கள்தொகையான ஏழு கோடி பேரில் குடிநோயால் பாதிக்கப்பட்டவர் கள் சுமார் ஒரு கோடிப் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், குடிநோயாளி கள் அந்த ஒரு கோடிப் பேர் மட்டும்தானா? குடிநோய் என்பது குடும்ப நோய், சமூக நோய். குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் குடிநோயாளிகளை மட்டும் கொண்டு கணக்கிடக் கூடாது. குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் நபர்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஒரு நபர் குடிப்பதால், அவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக..!!
என்ன நடக்கிறது இங்கே?
யார் காரணம் இதற்கெல்லாம்?
மதுவின் பிடியிலிருந்து நம் தமிழகத்தை மீட்க என்ன செய்யப் போகிறோம் நாம்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் பயணம் இது..!!
வரும் வாரம் முதல்...
திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் நடுப்பக்கங்களில்..
காத்திருங்கள்..!!
இப்படியாக 02.10.14 காந்தி ஜெயந்தி நாளன்று, ஹிந்து தமிழ் நாளிதழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இன்றைய தினம் முதல் கட்டுரையை படித்தபோது அற்புதமாக இருந்தது. நமது கிராமத்து வலைப்பூவில் மதுவால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை, எனது தந்தையாரின் வாழ்க்கையிலிருந்தே பிரதிபலித்திருந் தேன். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கதையாக எழுதியிருந்தேன். அதேபோல், கிராமத்துப் பெயரில் இருக்கும் முகநூலிலும் மதுவின் தீமையைக் குறித்து எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருந்தேன். கிராமத்து வலைப்பூவில் நான் எழுதும் கட்டுரைகளை ஹிந்து இதழுக்கு மின்னஞ்சலில் அனுப்பிக் கொண்டே இருப்பேன். இன்றைய தினத்தில் வலைப்பூ உருவாக்கிய நாளிலிருந்து இலட்சம் முகவரிகளுக்கு மின்னஞ்சல் செய்திருப்பேன். என்னுடைய தந்தையாரின் இறுதி நாட்கள் என்ற கட்டுரைக்கு ஹிந்து தமிழ் நாளிதழ் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். நானும் முத்தாய்ப்பாக மதுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து, தொடர் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன். என்னுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்ட்டனவா? இல்லையா? என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஹிந்து குழுமம் வாசகர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறது என்பதை மேற்கண்ட அறிவிப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். இதற்கு முன்பு 'வேர்களைத் தேடி' என்ற அற்புதமான தொடரை எழுத்தாளர் சமஸ் அவர்கள் எழுதினார். அற்புதமாக கடலோர மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தார். எழுத்தாளர் ஜே.டி.குரூஸ் அவர்கள் எழுதிய 'ஆழி சூழ் உலகு', "கொற்கை" என்ற இரண்டு நாவல்கள், தமிழ் இலக்கிய உலகில் சமீபத்திய பிரமாண்டமான படைப்புகள். இந்த இரண்டு நாவல்களின் தாக்கமும் 'வேர்களைத் தேடி' கட்டுரையில் இருந்தது. இனிவரும் நாட்களில் ஹிந்து தமிழ் நாளிதழில் மதுவால் ஏற்படும் சமூக சீரழிவைக் குறித்து எழுதப்படும் கட்டுரையும் நல்லதொரு வரவேற்பை பெரும்..!!

No comments:
Post a Comment