நாகரிகத்தைக் கண்டெடுத்து
கொடுத்த நாமே
கண்டபடி பேசலாமா.?
என்ன பேசினாங்க?
என்ன பேசினாங்களா..?
என்னென்னவோ பேசுறாங்க.
போடா.. கூழு குடிச்ச பயலே.!
போடா.. குந்தக் குடிசையில்லாத பயலே.!
போடா..பொறம்போக்கு.!
நீயெல்லாம்...
ஆடு மேய்க்கத்தான் லாயக்கு..
மாடு மேய்க்கத்தான் லாயக்கு..
யாரு யாரைப் பாத்து பேசுறது..?
தன்னோடு பிறந்த தன் இனத்தை
தன் இனமே பேசுறது..
கூழ் உணவு என்ன மட்டமான உணவா..?
ஆனந்த விகடனில் தொடராக வெளிவரும்
ஆறாம் திணையை
ஆறு முறை படிச்சிட்டு
அப்புறமா சொல்லுங்க.
குளக்கட்டாக்குறிச்சி ஊரில் பிறந்து வளர்ந்து என்னுடன் பால்ய காலம் வயது முதலாக பழகிய நண்பன் வெங்கடேஷ். ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை படித்து முடித்த பின்பு அப்பா செல்லையாவின் உத்தரவுக்கு இணங்க கருப்பு, வெள்ளை ஆடுகள் இவற்றுடன் செம்மறி ஆடுகளையும் மேய்க்கும் மகத்தான மேய்ச்சல் பணிக்கு வாழ்நாள் முழுமைக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
நம்ம இனம் நம்ம மண்ணுல
இலவச மனைப் பட்டாவை கேட்டு
இன்னும் அலையுதேங்குற
தவிப்பு நெருப்பை இன்னும்..
இங்க பத்த வைக்க முடியலேன்னா..
அப்புறம் எதுக்கு இந்த அரசியல் வெங்காயம் எல்லாம்..?
ஆடு, மாடு மேய்ச்சவங்களோட அந்த
அனுபவங்களில் தானுங்க
பண்பாடு பதப்பட்டது.
வாழ்க்கை அழகானது.
அவங்க அதிகமா பயன்படுத்தின
அழகான ஒரு தூய மொழியை
நாம எவ்வளவு எளிமையா
கொச்சை செய்துவிட்டோம்.
எப்படி..?
எப்படியா..?
'விசிலடிச்சான் குஞ்சுகள்'னு..
அந்த ஒலி ஒண்ணும்
அர்த்தமற்ற இரைச்சலுக்கானது இல்லைங்க.
அது..
குறிஞ்சியிலும் முல்லையிலும்
தாங்கள் எங்கெங்கோ இருக்கிறோம்
எங்கே வந்துகொண்டிருக்கிறோம் என்பதை
தூரங்களை மீறி
காட்டு அம்புகளை மீறி
தெரிவித்துக் கொள்கிற
குறியீட்டு மொழி.
அடையப்போட்ட ஆடுகளில்
ஒன்று எழுந்து
ஒழுங்கீனம் செய்ய முற்பட்டால்
இந்த மொழிதான் போய்,
மொத்த ஆட்டுக் கூட்டத்தையும்
முறை செய்யும்.
நள்ளிரவு.. இடி மின்னலுடன் மழைத்தூறல்..
உறி, பானை, தோற்படுக்கை, இவற்றோடு
ஒற்றைக்காலில் ஒரு காலை தண்டில் ஊற்றி
நனைந்தபடி நிற்கும் அந்த இடையர்,
ஒலிக் குறிப்புகளாலேயே
தன்னுடைய பட்டி ஆடுகளுக்கு வர இருக்கிற
ஆபத்தினை அறிந்து
சீழ்க்கையொலி இசைக்கிறார்.
அந்த ஒலி விரைவாகப் போய்
குட்டி ஆடுகளைத் தூக்கப்போக வந்திருக்கும்
குறு நரியைத் திடுக்கிடவைத்து
முள் நிறைந்த புதருக்குள்
விரட்டி விட்டுத் திரும்புகிறது.
உயிர் காத்த அந்த சீழ்க்கை,
வீளை என்ற மொழியை
இனி... தவறான பொதுக் கருத்தில்
கொச்சை செய்து விடாதீர்கள்.
அது, அந்த மொழியைக் கண்டெடுத்து
நமக்குத் தந்த குறிஞ்சி, முல்லை எனும் மூத்தோரை
அவமதிப்பதாக ஆகிவிடும்.
திண்கால் உறியன், பானையன், அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவீடு வீளை கடிதுசென்று இசைப்பத்
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குருந்தூறு இரியப் போகும்.
--இடைகடனார், அகநானூறு - 274, திணை - முல்லை.
இலவச மனைப் பட்டாவை கேட்டு
இன்னும் அலையுதேங்குற
தவிப்பு நெருப்பை இன்னும்..
இங்க பத்த வைக்க முடியலேன்னா..
அப்புறம் எதுக்கு இந்த அரசியல் வெங்காயம் எல்லாம்..?
ஆடு, மாடு மேய்ச்சவங்களோட அந்த
அனுபவங்களில் தானுங்க
பண்பாடு பதப்பட்டது.
வாழ்க்கை அழகானது.
அவங்க அதிகமா பயன்படுத்தின
அழகான ஒரு தூய மொழியை
நாம எவ்வளவு எளிமையா
கொச்சை செய்துவிட்டோம்.
எப்படி..?
எப்படியா..?
'விசிலடிச்சான் குஞ்சுகள்'னு..
அந்த ஒலி ஒண்ணும்
அர்த்தமற்ற இரைச்சலுக்கானது இல்லைங்க.
அது..
குறிஞ்சியிலும் முல்லையிலும்
தாங்கள் எங்கெங்கோ இருக்கிறோம்
எங்கே வந்துகொண்டிருக்கிறோம் என்பதை
தூரங்களை மீறி
காட்டு அம்புகளை மீறி
தெரிவித்துக் கொள்கிற
குறியீட்டு மொழி.
அடையப்போட்ட ஆடுகளில்
ஒன்று எழுந்து
ஒழுங்கீனம் செய்ய முற்பட்டால்
இந்த மொழிதான் போய்,
மொத்த ஆட்டுக் கூட்டத்தையும்
முறை செய்யும்.
நள்ளிரவு.. இடி மின்னலுடன் மழைத்தூறல்..
உறி, பானை, தோற்படுக்கை, இவற்றோடு
ஒற்றைக்காலில் ஒரு காலை தண்டில் ஊற்றி
நனைந்தபடி நிற்கும் அந்த இடையர்,
ஒலிக் குறிப்புகளாலேயே
தன்னுடைய பட்டி ஆடுகளுக்கு வர இருக்கிற
ஆபத்தினை அறிந்து
சீழ்க்கையொலி இசைக்கிறார்.
அந்த ஒலி விரைவாகப் போய்
குட்டி ஆடுகளைத் தூக்கப்போக வந்திருக்கும்
குறு நரியைத் திடுக்கிடவைத்து
முள் நிறைந்த புதருக்குள்
விரட்டி விட்டுத் திரும்புகிறது.
உயிர் காத்த அந்த சீழ்க்கை,
வீளை என்ற மொழியை
இனி... தவறான பொதுக் கருத்தில்
கொச்சை செய்து விடாதீர்கள்.
அது, அந்த மொழியைக் கண்டெடுத்து
நமக்குத் தந்த குறிஞ்சி, முல்லை எனும் மூத்தோரை
அவமதிப்பதாக ஆகிவிடும்.
திண்கால் உறியன், பானையன், அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவீடு வீளை கடிதுசென்று இசைப்பத்
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குருந்தூறு இரியப் போகும்.
--இடைகடனார், அகநானூறு - 274, திணை - முல்லை.
No comments:
Post a Comment