Wednesday, March 26, 2025

விருதுநகர் டூ குளக்கட்டாக்குறிச்சி..

ராமகிருஷ்ணன் அவர்களுடைய இளைய மகள் சித்ரா அவர்கள், விருதுநகர் ஊரிலுள்ள பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பினை படித்து வந்த பிறகு 1995ம் வருடம்போல.. வீட்டிலிருந்தபடியே பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளையில் டியூசன் சொல்லிக் கொடுத்தார். மார்க் ஆண்டனி கேரக்டரில் ரகுவரன், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "பாட்ஷா" படம் ரிலீசாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அன்புச் சகோதரியுடன் டியூசன் படிக்கும் காலச்சூழல் அமைந்த வேளை, 1996ம் வருடம்போல உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி மாதம்போல தொடங்கியது. 

எட்டாம் வகுப்பு படிக்கையில்.. ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்கள் கடினமாக இருந்தாலும் டியூசன் வகுப்பு மூலமாக எளிமையாக புரிந்து கொண்டு படிக்க முடிந்தது. காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை அவர்கள், பேரறிஞர் அண்ணா எனும் அடைமொழியுடன் தமிழ்நாட்டின் முதலைமைச்சராக பொறுப்பேற்ற 1967ம் வருடத்தின் காலண்டர் வருடமாக, 1995ம் வருடம் அமையப் பெற்றதை பார்க்கிறோம். எனது அப்பாவுடன் உடன் பிறந்த இளைய சகோதரிக்குப் பிறந்த மகனுடைய திருமண நிகழ்வு, கோவில்பட்டி நகரிலுள்ள ராஜ்மஹாலில் நடைபெற்ற 2001ம் வருடம், ஜூலை மாதம்.. சிவகாசி ஊருக்கு அருகிலுள்ள ஆனைக்குட்டம் ஊரைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள், ஒரு வருடத்திலிருந்து இருபத்தி வருடங்களுக்கு ஒரு முறை அதே வருடத்தின் காலண்டர் வருடமாக  நாளும், கிழமையும் ஒன்றாக வருவதை குறிப்பிட்டுச் சொன்னார்.  

ஆன்மீகத்தில் பயணங்களை செய்யும் காலகட்டமாக, திருஞானசம்பந்தர் பாடிய "கோளாறு பதிகம்" பாடலினை பாடும்போது, நவக்கிரகங்களினால் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளிலிருந்து வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும் என்பதை அறிந்து பன்னிரு திருமுறைகளின் பாடல்களை தினம்தோறும் பாடி வருகையில்.. 1969ம் வருடம், மார்ச் 10ம் நாளில்.. சென்னை நகரிலுள்ள தி லிட்டில் பிளவர் கம்பெனி வெளியீடு செய்த "சகல காரிய சித்தியும் பன்னிரு திருமுறைகளும்" எனும் புத்தகம், இந்த வருடத்தின் மார்ச் மாதம்போல கிடைக்கப் பெற்று அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்தது.

No comments:

Post a Comment