ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய கடுமையான வெயிலின் தாக்கம் மே மாதத்திலும் தொடர்கிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்திலும் பரவலாக மழை பெய்த காரணத்தால், வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. கோடை காலத்தில் நல்ல குளுமையான தட்ப வெப்பநிலை நிலவும் கோவை நகரிலேகூட விவசாயம் செய்யும் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, அதிகமான குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு கடுமையான வெயிலின் தாக்கம் 2023ம் வருடத்தின் மார்ச் மாதத்திலே தொடங்கி, இந்த வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்..
தமிழ்நாட்டினுடைய தென் மாவட்டங்களில் எப்போதும்போல காணப்படும் வெப்பநிலையிலிருந்து கொஞ்சம் கூடுதலான அளவினை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. வெப்பநிலை அதிகமாக இருக்கும் நான் பிறந்த திருநெல்வேலி ஜில்லாவில், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கடினமான காரியம் என்றே சொல்லலாம். தினசரி பத்திரிகைகள் இப்போது ஊரிலுள்ள தேநீர் கடைக்குகூட வருவதில்லை. நகர்ப்புறங்களில் நாளிதழ்கள், பத்திரிகை விற்பனை என்பது பத்து மடங்கிலிருந்து மூன்று மடங்காக கீழிறங்கி விட்டது என்றே சொல்லலாம்.
கடுமையான கோடை வெயிலின் வெப்பநிலை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தாலும், தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள் வாசித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கோவில்பட்டி நகரிலிருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையிலுள்ள அரசு நூலகத்தில் தமிழக அரசாங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து போனதை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்தது.
சங்கரன்கோவில் ஊருக்குச் செல்லும் சாலையிலுள்ள ராமசாமி பூங்காவில் கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு 2024ம் வருடத்தின் ஜனவரி மாதமாக, புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட அறிவு சார் மையத்தில் பல்வேறு விதமான புத்தகங்கள் அமையப்பெற்று நவீன கணிப்பொறி வசதிகளுடன் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முறையில் பயன்தரக்கூடிய பெரிய நூலகம் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வேளையில்.. இலக்கியம், வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த புத்தக வாசிப்பு என்பது ஆயிரத்தில் ஒருவன் என்று சொல்லும் அளவிற்கு அபூர்வமாகி உள்ளது.
No comments:
Post a Comment