Tuesday, October 21, 2014

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!!

பண்டிகை என்பது குடும்ப, சமூக உறவுகளைப் பிரதிபலிக்ககூடியது. புதிய உறவுகளை ஏற்படுத்தித் தரக்கூடியது. இந்தியாவின் மாபெரும் கொண்டாட் டங்களில் ஒன்றான தீபாவளி திருநாள் இதை பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் திருவிழா. நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாக, மக்களின் மனங்களில் எல்லையற்ற மகிழ்ச்சியை உருவாக்கு கிறது. இந்த 2014 ம் ஆண்டு தீபாவளி திருநாளை குளக்கட்டாக்குறிச்சி கிராமத்து மக்களும், உலகெங்கும் வாழக்கூடிய நமது கிராமத்து மக்களும் குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடி மகிழ இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்..!!

Sunday, October 12, 2014

மாதிரி கிராமங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கும் திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் - 10.10.14


பத்திரிகை செய்தி : Click here

கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்வதற்காக மாதிரி கிராமங்களை எம்.பி.க்கள் உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

மாதிரி கிராம திட்டம்:
கடந்த சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னாஎன்னும் மாதிரி கிராமத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் அந்தந்த தொகுதி எம்.பி.க்களின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பிரபல பொதுவுடைமை தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி டெல்லியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கிராமங்களை மேம்படுத்த வேண்டும்:
ஒவ்வொரு எம்.பி.யும் தனது தொகுதிக்கு உட்பட்ட 3 கிராமங்களை தேர்ந்தெடுத்து அவற்றை மக்களின் பங்களிப்புடன் மாதிரி கிராமங்களாக மேம்படுத்தவேண்டும். அங்கு வசிக்கும் மக்களின் அத்தனை தேவைகளை யும் நிறைவேற்றும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். இதன் மூலம் கிராமங்களை விவசாயம், கைத் தொழில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் மேம்படுத்த முடியும். முதலில் 2016–ம் ஆண்டுக்குள் ஒரு எம்.பி. தனது தொகுதியில் இதுபோன்ற ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கவேண்டும். 2019–க்குள் மேலும் 2 மாதிரி கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மேம்படுத்த வேண்டும்.

2500 கிராமங்கள் வளர்ச்சியடையும்:
நம்மிடம் சுமார் 800 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். 2019–ம் ஆண்டுக்குள் நாம் ஒவ்வொரு தொகுதியிலும் 3 மாதிரி கிராமங்களை உருவாக்கினால் நாடு முழுவதும் சுமார் 2,500 கிராமங்களை வளர்ச்சியடையச் செய்து அவற்றை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்கி விடலாம். இந்த திட்டத்தில் மாநில அரசுகளும் பங்கேற்று தொகுதி எம்.எல்.ஏ.க்களும் மாதிரி கிராமங்களை உருவாக்கினால் மேலும் 7 ஆயிரம் கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்யலாம்.

சொந்த ஊர் கூடாது:
2019–க்குப் பின்பு 2024–ம் ஆண்டு வரை எம்.பி.க்கள் தங்களது தொகுதிகளில் மேலும் 5 மாதிரி கிராமங்களை உருவாக்கி அவற்றை வளர்ச்சி அடையச் செய்து விட முடியும். இப்படி ஒரு பகுதியில் ஒரு மாதிரி கிராமம் உருவாகி விட்டால் தங்களது பகுதியிலும் அதேபோல ஒரு கிராமம் உருவாகவேண்டும் என்கிற எண்ணம் அப்பகுதியில் உள்ள மற்ற மக்களிடம் ஏற்படும். இதனால் இந்த கிராமங்களும் வளர்ச்சி அடையும் நிலை உருவாகும். இத்திட்டம் தூய்மையான அரசியலுக்கான வாசல்களைத் திறக்கும். எம்.பி.க்கள் தங்கள் விரும்பும் கிராமத்தை தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்க லாம். இதில் ஒரேயொரு நிபந்தனை, அந்த கிராமம் எம்.பி.யின் சொந்த ஊராகவோ, அவர்கள் திருமண சம்பந்தம் செய்து கொண்ட ஊராகவோ இருக்கக் கூடாது.

வாரணாசியில் தேர்ந்தெடுப்பேன்:
மாதிரி கிராம திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் நானும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்க இருக்கிறேன். விரைவில் அங்கு சென்று எந்த கிராமத்தை தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிப்பேன். இதுபோல, மாதிரி கிராமங்களை உருவாக்குவதால் நாம் கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிலைமை மாறி கிராமங்கள் நமது தேவையை நிறைவேற்றும் நிலைமை உருவாகி விடும். கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நமது கிராமம் மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தவேண்டும். இதுபோன்ற மாதிரி கிராமங் களை உருவாக்குவதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்கள் வறுமையில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறாக பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Monday, October 6, 2014

ஹிந்து தமிழ் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்..!!

நாடே இப்போது குடிநோயாளியாகிவிட்டது. மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகி விட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்.

அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடி நோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்திதான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதியவற்றின் சாரத்தைத்தான் மேலே பார்த்தீர்கள்.

சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், ஒட்டு மொத்தச் சமூகமும் கைகோக்க வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி நீட்டப்பட்ட கைகளுள் ஒன்றுதான் இந்தத் தொடர்.

தமிழகத்துக் இது இருண்ட காலம்! மிகைப்படுத்தவில்லை. சுமார் பத்தாண்டு
களுக்கு முன்பு, பூட்டியிருக்கும் கடைக்கு முன்பாக யாரும் காத்திருந்து குடித்ததில்லை என்பதையும், இன்று அதிகாலையிலேயே அல்லாடுகிறார் களே என்பதையும் யோசித்துப் பாருங்கள்..!!

தமிழக மக்கள்தொகையான ஏழு கோடி பேரில் குடிநோயால் பாதிக்கப்பட்டவர் கள் சுமார் ஒரு கோடிப் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், குடிநோயாளி கள் அந்த ஒரு கோடிப் பேர் மட்டும்தானா? குடிநோய் என்பது குடும்ப நோய், சமூக நோய். குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் குடிநோயாளிகளை மட்டும் கொண்டு கணக்கிடக் கூடாது. குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் நபர்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஒரு நபர் குடிப்பதால், அவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக..!!

என்ன நடக்கிறது இங்கே?
யார் காரணம் இதற்கெல்லாம்?
மதுவின் பிடியிலிருந்து நம் தமிழகத்தை மீட்க என்ன செய்யப் போகிறோம் நாம்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் பயணம் இது..!!

வரும் வாரம் முதல்...
திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் நடுப்பக்கங்களில்..
காத்திருங்கள்..!!

இப்படியாக 02.10.14 காந்தி ஜெயந்தி நாளன்று, ஹிந்து தமிழ் நாளிதழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இன்றைய தினம் முதல் கட்டுரையை படித்தபோது அற்புதமாக இருந்தது. நமது கிராமத்து வலைப்பூவில் மதுவால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை, எனது தந்தையாரின் வாழ்க்கையிலிருந்தே பிரதிபலித்திருந் தேன். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கதையாக எழுதியிருந்தேன். அதேபோல், கிராமத்துப் பெயரில் இருக்கும் முகநூலிலும் மதுவின் தீமையைக் குறித்து எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருந்தேன். கிராமத்து வலைப்பூவில் நான் எழுதும் கட்டுரைகளை ஹிந்து இதழுக்கு மின்னஞ்சலில் அனுப்பிக் கொண்டே இருப்பேன். இன்றைய தினத்தில் வலைப்பூ உருவாக்கிய நாளிலிருந்து இலட்சம் முகவரிகளுக்கு மின்னஞ்சல் செய்திருப்பேன். என்னுடைய தந்தையாரின் இறுதி நாட்கள் என்ற கட்டுரைக்கு ஹிந்து தமிழ் நாளிதழ் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். நானும் முத்தாய்ப்பாக மதுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து, தொடர் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன். என்னுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்ட்டனவா? இல்லையா? என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஹிந்து குழுமம் வாசகர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறது என்பதை மேற்கண்ட அறிவிப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். இதற்கு முன்பு 'வேர்களைத் தேடி' என்ற அற்புதமான தொடரை எழுத்தாளர் சமஸ் அவர்கள் எழுதினார். அற்புதமாக கடலோர மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தார். எழுத்தாளர் ஜே.டி.குரூஸ் அவர்கள் எழுதிய 'ஆழி சூழ் உலகு', "கொற்கை" என்ற இரண்டு நாவல்கள், தமிழ் இலக்கிய உலகில் சமீபத்திய பிரமாண்டமான படைப்புகள். இந்த இரண்டு நாவல்களின் தாக்கமும் 'வேர்களைத் தேடி' கட்டுரையில் இருந்தது. இனிவரும் நாட்களில் ஹிந்து தமிழ் நாளிதழில் மதுவால் ஏற்படும் சமூக சீரழிவைக் குறித்து எழுதப்படும் கட்டுரையும் நல்லதொரு வரவேற்பை பெரும்..!!

Thursday, October 2, 2014

அக்டோபர் 2, 2014 - காந்தி ஜெயந்தி தினம்


நம்ம இந்திய நாடு சுதந்திரம் வாங்குறதுக்கு ஆங்கிலேயர்கள்கிட்ட போராடுன ஆயிரக்கணக்கான மனிதர்கள்ல மகாத்மா காந்திஜி ஒரு மகத்தான மனிதர்.
இங்கிலாந்து நாட்டுல லண்டனுக்கு போயி வழக்கறிஞர் படிப்புல பட்டம் வாங்கி, தென்னாப்பிரிக்கா நாட்டுல இந்தியர்களோட உரிமைகளுக்காக போராடி, திரும்ப இந்திய நாட்டுக்கு வந்து சுதந்திரத்துக்காக போராடி, இலட்சக் கணக்கான மக்களோட ஆன்மாவை தட்டி எழுப்புனதுல காந்திஜிக்கு அளப்பரிய பங்கு இருக்குது. 

தன்னோட வாழ்க்கையையே பாரத தேசத்துக்காக அர்பணிச்சவரு. சமீப நான்கு வருடங்கள்ல காந்திஜியைப் பத்தி சில புத்தகங்களை படிச்சேன். எழுத்தளார் ராமச்சந்திர குஹா எழுதுன 'காந்தி ஆப்டர் இந்தியா', காந்தியின் கடைசி இருநூறு நாட்கள், நள்ளிரவில் சுதந்திரம், எழுத்தாளர் ஜெயமோக னோட 'இன்றைய காந்தி', எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோட 'காந்தியோடு பேசுவேன்' போன்ற புத்தகங்களை படிச்சப்ப கண்ணுல இருந்து கண்ணீர்தான் வந்துச்சு. பத்து வருசத்துக்கு முன்னாடியே காந்தியோட சுயசரிதை நூலான 'சத்திய சோதனை' புத்தகத்தை படிச்சிருந்தேன். 

2002 ம் வருஷம் ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோவோட 'காந்தி' படத்தை பாத்தப்ப, எல்லை யில்லாத உணர்ச்சிப் பிழம்பு மனசுல உருவாகிச்சு. அதுக்குப் பிறகு காந்தி படத்தை மட்டும் பத்து தடவை பாத்தேன். ஒவ்வொரு தடவை பாக்கும்போதும் புதிய புதிய வாழ்க்கை அனுபவமா இருந்துச்சு. இப்பேற்பட்ட மகான் வாழ்ந்த காலத்துல நாம வாழ முடியாம போச்சேன்னு நினைச்சேன். இந்த காந்தி சினிமா படம், நான் இந்த பூமியில பிறந்த வருசமான 1982 வருஷம் நவம்பர் 30 ந் தேதி அன்னைக்கு உலகம் முழுவதும் திரையரங்குல வெளியாகி, மிகப்பெரிய அளவுல அதிர்வு அலைகளை உண்டாக்கி இருக்குது. இன்னைக்கு வரைக்கும் காந்தி மகானைப் பத்தி தெரிஞ்சிகிடுறதுக்கு ஒரு மாபெரும் காவியமுன்னு கூட சொல்லலாம். 

உலக அளவுல ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் உருவாகுறதுக்கு,
இந்த 'காந்தி' சினிமா படம் காரணமா இருந்துருக்கு. பல நாடுகள்ல காந்தி மகானோட அகிம்சையும், சத்திய சோதனையும் பின்பற்றப்பட்டு வருது. பல உலக நாடுகள்ல இருக்குற பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாடி, காந்தி மகானோட சிலையை வச்சிருக்காங்க. லண்டன் மாநகருலயும், அமெரிக்கா வோட வெள்ளை மாளிகை முன்னாடியும் மகாத்மா காந்தியோட சிலை இருக்குது. உலகம் முழுவதும் காந்தி தாத்தாவோட கொள்கைகள் ஜெயிச்சிரு க்குது. இந்திய தேசத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான்னு சொன்னவரு. கிராமப்புற முன்னேற்றம் இல்லாம, பாரத தேசத்துல வளர்ச்சி இருக்காதுன்னு ஆணித்தரமா சொன்னவரு. தீண்டாமை கொடுமைக்கு எதிரா போராடுனவரு. அரிஜன மக்களுக்காக தன்னையே அர்பணிச்சவரு. இந்திய நாட்டோட சுதந்திரத்துக்காக பத்து வருடங்களுக்கு மேல சிறையில துன்பங்களை அனுபவிச்சவரு. இப்படி நம்ம தலைமுறைகள் நலமா வாழனுமுன்னு, தன்னோட வாழ்க்கையையே தியாகம் பண்ண, மகாத்மா காந்தியோட பிறந்த நாளனா இன்னைக்கு, அவரோட கொளகைகளை நாம பின்பற்றி பாரத தேசத்தை உலக நாடுகள் மத்தியில உன்னதமான தேசமா மாத்துறதுக்கு, உறுதிமொழி எடுத்துக்குவோம். வந்தே மாதரம்..!! வந்தே மாதரம்..!! பாரத் மாதாகி ஜே..!! சத்ய மேவ ஜெயதே..!!