ஊரிலிருந்து ராமசாமி நாயக்கர், பெருமாள்சாமி, பரணிராஜ், கந்தப்பா நாயக்கர், சீனிராஜ், சுந்தர்ராஜ், ராஜு நாயக்கர் என இளைஞர் பட்டாளங்களாக தங்களுடன் தொண்ணூறு பேருக்கும் மேலே அழைத்துச் சென்று பங்கேற்று உள்ளனர். விவசாயம் செய்யும் குடும்பங்களில் வசிக்கும் பிள்ளைகளுடைய கல்விச் செலவு என்பது பெரிய போராட்டமான சூழலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒவ்வொரு வருடமும் அறவழியில் செய்வதன் மூலம் நமக்கான உரிமைகளை பெற்றிடும் பயிற்சிக் களமாக எதிர்காலத்தில் அமைந்து இளைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Saturday, December 29, 2012
விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்..
ஊரிலிருந்து ராமசாமி நாயக்கர், பெருமாள்சாமி, பரணிராஜ், கந்தப்பா நாயக்கர், சீனிராஜ், சுந்தர்ராஜ், ராஜு நாயக்கர் என இளைஞர் பட்டாளங்களாக தங்களுடன் தொண்ணூறு பேருக்கும் மேலே அழைத்துச் சென்று பங்கேற்று உள்ளனர். விவசாயம் செய்யும் குடும்பங்களில் வசிக்கும் பிள்ளைகளுடைய கல்விச் செலவு என்பது பெரிய போராட்டமான சூழலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒவ்வொரு வருடமும் அறவழியில் செய்வதன் மூலம் நமக்கான உரிமைகளை பெற்றிடும் பயிற்சிக் களமாக எதிர்காலத்தில் அமைந்து இளைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Wednesday, December 26, 2012
Our Village KulakattaKurichi.. Reason Of Important to Create Our Native Blog
Kanagaraj, Karpagaraj, Vigneswaran, Harikesavan, Srinivasan uncle, Muniyappasamy including some of the have joined indian army and serving for the indian nation. Seenivasan Naicker has been positioned indian army.. Havilthaar, Karnal, Major level post. He has been served above 36 years. Laterly I can post him photo and describe history about achievement of indian army. He is a very inspiration leader of My village youngsters. Now he presently living Bangalore.They are our huge treasurers.
Tuesday, December 18, 2012
ஜெகந்நாதன் அவர்களுடன் நேர்காணல்..
Sunday, September 2, 2012
நமது கிராமம் குளக்கட்டாகுறிச்சி @வலைப்பூ உருவாக்க முக்கிய காரணம் என்னவெனில்..
ஒவ்வொரு நாட்டிற்கும் பல மகத்தான வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள மாநிலத்திற்கும், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் உள்ளது. அப்படி பார்க்கும்போது நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்திற்கும் பல பெருமைகள் உள்ளது.
செந்தில்குமார்..
குளக்கட்டாகுறிச்சி
02.09.2012
Wednesday, January 11, 2012
மெட்ராஸில்..
முப்பது வருடங்கள் முன்பு நடுத்தர குடும்பமாக இருந்தவர்கள், இன்றைய நாளில் நல்ல பொருளாதார நிலையுடன் சிறிய பணக்காரர் எனும் நிலையை அடைந்த பின்பு.. முப்பது வருடங்கள் முன்பு பெரிய பணக்கார குடும்பமாக இருந்தவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள் எனும் நிலையை அடைந்ததை ஊரிலே கண்முன்னே பார்க்க முடிந்தது. நாச்சியார் அம்மா மகன் ஹரிபாலகண்ணன், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலே இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முப்பது லட்சம் செலவில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிப்பதை மூத்த அண்ணன் ஹரிகேசவன் நான்கு வருடம் முன்பு சொன்னார். 2011ம் வருடம், டிசம்பரில்.. மெட்ராஸில் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புறமுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் ஹரிபாலகண்ணன் தங்கி இருந்தபோது, சாலையில் நடந்து வருகையில் இரவு ஏழு மணி அளவில் பார்த்து நலம் விசாரித்தது. எவரிடமும் கடன் வாங்காமல் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நிம்மதியாக செல்வதாக சொல்ல.. மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வேளை மேற்கண்ட விசயங்களை சொன்னேன். முகமலர்ச்சியுடன் சிரித்தார்.
2011ம் வருடம்.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு வருடமாக அமைந்து, டிசம்பரில் முடியும் தருணத்தில் இருந்தது. மாமா ஹரிபாலகண்ணனை சந்தித்து பேசிய பின்பு ஐந்து நாட்களில் தானே புயல் வந்து கடலோர மாவட்டங்களில் பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி இருந்தது. மருத்துவர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டு இருந்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் மருந்து கட்டும் காம்பவுண்டர்கள் இருபது, முப்பது ரூபாய் என பணம் வசூலித்து வயிறை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள். ஹரிகேசவன், ஹரிபாலகண்ணன் இருவருடன் பிறந்த இளைய தம்பி கற்பகராஜ். இந்தப் பையனும் இந்திய நாட்டின் ராணுவத்தில் பதினேழு வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று ஊரில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்கிறார். இரண்டு அண்ணனுடன் பிறந்த இளைய சகோதரி, கற்பகராஜின் அக்கா மணிமேகலை என்பவர் கல்யாணமாகி வெளியூரில் வசிக்கிறார்.