Tuesday, December 18, 2012

ஜெகந்நாதன் அவர்களுடன் நேர்காணல்..

எனது அப்பாவின் அப்பா ராமசாமி அவர்களை பெற்றெடுத்த அப்பா வரதராஜன் அவர்களுடன் உடன் பிறந்த அண்ணன் போலப்பா அவர்கள். போலப்பா அவர்களுக்கு பிறந்த மகன் பெருமாள்சாமி அவர்கள். பெருமாள்சாமி அவர்களின் மூத்த மகன் ஜெகந்நாதன் அவர்கள். கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள சின்னியம்பாளையம் ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். கோவை புறநகரின் கணியூரிலுள்ள லட்சுமி மிஷின் வொர்க்ஸில் மில் தொழிலாளியாக பணிக்குச் சென்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். வலைப்பூவிற்காக நேர்காணல் செய்கையில், குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த இளம் பிராயத்து நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவருடைய அப்பா பெருமாள்சாமி அவர்கள், மூதறிஞர் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து "மஹாபாரதம்" நூலை படிப்பதை சொன்னது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜெகந்நாதன் அவர்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அரசு நூலகத்திற்குச் சென்று இலக்கியம், வரலாறு என நூல்களை படிப்பார்.


எனது அப்பா.. ராமகிருஷ்ணன் 
அப்பாவின் அப்பா.. ராமசாமி அவர்கள்..
ராமசாமி அவர்களின் அப்பா வரதராஜன் அவர்கள்..
வரதராஜன் அவர்களுடன் உடன் பிறந்த அண்ணன் போலப்பா அவர்கள்..
போலப்பா அவர்களின் மகன் பெருமாள்சாமி அவர்கள்..
ஜெகந்நாதன் அவர்களுடன் உடன் பிறந்த தம்பி ராஜேந்திரன் அவர்கள்..

குறிப்பு: இரண்டு தினங்கள் முன்பு BADA OS எனும் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் போன் மொபைலில் ஜெகந்நாதன் அவர்கள் பேசியதை பதிவு செய்தது.

No comments:

Post a Comment