டிசம்பர் 28, 2012ம் வருடம். இந்த வருடம் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாது போன காரணத்தால் விவசாய மகசூல் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டின் அரசாங்கம் வறட்சி நிவாரண பணத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கு உடனடியாக அறிவிக்க கோரியும், அதிக மானியம் வழங்க வலியுறுத்தியும், ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்ற விவசாய பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர்.
ஊரிலிருந்து ராமசாமி நாயக்கர், பெருமாள்சாமி, பரணிராஜ், கந்தப்பா நாயக்கர், சீனிராஜ், சுந்தர்ராஜ், ராஜு நாயக்கர் என இளைஞர் பட்டாளங்களாக தங்களுடன் தொண்ணூறு பேருக்கும் மேலே அழைத்துச் சென்று பங்கேற்று உள்ளனர். விவசாயம் செய்யும் குடும்பங்களில் வசிக்கும் பிள்ளைகளுடைய கல்விச் செலவு என்பது பெரிய போராட்டமான சூழலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒவ்வொரு வருடமும் அறவழியில் செய்வதன் மூலம் நமக்கான உரிமைகளை பெற்றிடும் பயிற்சிக் களமாக எதிர்காலத்தில் அமைந்து இளைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment