Monday, August 12, 2024

ஸ்ரீமந் நாராயணின் கல்கி அவதாரம்..

ஒவ்வொரு குறிப்பிலும் மனதிற்கு நன்றாக ஞாபகம் வரும் நினைவுகளை மையமாக கொண்டே எழுதுவது மிகவும் எளிதாக இருந்தது. எழுதுவதின் மூலமாக ஞாபக சக்தியின் அளவு அதிகரிப்பதுடன், நம்முடைய நினைவுகளின் அடுக்கிலிருந்து கடந்த காலங்களின் நிகழ்வுகளை வெளிப்படுத்த முடிகிறதா..? என்பதை நினைக்கையில் வியப்பாக இருக்கும். பிறந்த ஊரிலிருந்து பெற்றோர்கள், உறவினர்களை பிரிந்து வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று படிப்பு, வேலை விசயமாக வசிக்கையில், இருபது வருடங்களுக்கு முன்பு கடிதங்களின் மூலமாக நம்முடைய பாசம், அன்பான உணர்வுகளை வெளிப்படுத்த எழுதும் அதே உணர்வோடுதான் இந்த வலைப்பூவில் எழுதுவது. பெரிதாக வரலாற்று, பூகோள சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்து எழுதுவதை போன்று எழுதுவது கிடையாது. எனது அன்புத் தங்கை அற்புதமாக கடிதம் எழுதுவார். இப்போது எழுதுகிறாரா..? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு கடிதங்களை எழுதும் பழக்கம் நம்மிடமிருந்து விடைபெற்று செல்ல முடியாத அளவிற்கு டிஜிட்டலில் எழுதுவதின் மூலமாக எழுதுகிற ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். 

2013ம் வருடத்தில் நடைபெற இருந்த காளியம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவிற்கு இரண்டு மாதம் முன்பாக நல்ல நல்ல புகைப்படங்களை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்கை அனுப்பியபோது, 1983ம் வருடத்தின் மே 12 நாளில் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பிறந்ததை ஞாபகமாக குறிப்பிட்டு சொன்னார். அப்பா கிருஸ்ணசாமி அவர்கள், காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பணிபுரிகையில் இந்திய ராணுவத்தின் மருத்துவமனை ஒன்றில் உடன்பிறவா தங்கை பிறந்த நிகழ்வு, ஒரு வரலாற்று நிகழ்வுபோல மெய்சிலிர்க்க வைத்தது. 


பிறந்த ஊரிலிருந்து முன்னூறு அல்லது ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலும் இருக்கையில் பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளின் மூலமாக தங்கையுடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதற்கு ரமண மஹரிஷி, சந்திரசேகர பாரதி சுவாமிகள் எனும் இருவரின் ஆன்மீகப் பேராற்றல் உறுதுணை புரிந்தது. இந்த வருடத்தின்  ஜூலை மாதம், இரண்டாவது வாரத்தின் முதல் தினமாக காளியம்மன் சாமியின் முன்பாக தங்கையுடன் சில நிமிடங்கள் பேசியபோது, கராத்தே மணியுடன், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த @ரங்கா படத்தின் இயக்குநர் தியாகராஜன் அவர்களின் நினைவு நாளான ஜூலை 1 அன்று.. கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள பிராட்வே சினிமாஸில் @கல்கி 2898 AD படத்தினை பார்த்த நிகழ்வினை பேசியது. 

No comments:

Post a Comment