ரெண்டமூழம் படத்தில் நடிப்பது பற்றி நடிகர் மோகன்லால் தனது முகநூலில் பேசிய நேர்காணல். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் வசித்தபோது மோகன்லாலின் நேர்காணலை பார்க்கும் பாக்கியம் அமைந்தது.
நம்மை வியக்க வைக்கும் கதைகளை அப்பா சொல்லிய வண்ணம் சென்றுபோன சிறுவயது நாட்கள் மலரும் நினைவுகளாக கண்முன் வந்து நிற்கும். சக்திக்கு அப்பாற்பட்ட கதைகளை கேட்கவோ, அதை ஊகித்து பரிசீலனை செய்யவோ நாமும் நிறைய படித்திருந்தால் மட்டுமே முடியும் என்று பிரெஞ்சு எழுத்தாளர் வால்டேர் சொன்னது பெரிய தீர்க்கதரிசனம்.
முதலில் வியப்புற மனதில் தோன்றும் கதைகள் நாளடைவில் காலச் சக்கரங்களின் சுழற்சியில் பிரபஞ்சமே நம்மை ஒரு 'பாற்கடல்' வாசத்தின் அருகாமையை உணரச் செய்கையில் எல்லையில்லாத ஆற்றல் நம்மை ஆட்கொள்வதுண்டு. காலங்களின் ஓட்டங்கள் பிரபஞ்சத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்பது அறிஞர்களால் மட்டுமே உணரக்கூடிய சங்கதியாக இருப்பது வியப்பான ஒன்றுதான். இந்த அறிஞர் பெருமக்கள் அசைக்க முடியாத மனவலிமையோடு, இன்ன காலங்களில் இவை இவை நடக்கும் என அனுமானித்து அத்தகைய ரகசியங்களை துருவித் துருவி தேடிய வண்ணம் உள்ளனர்.
சிரஞ்சீவி மனிதரான வியாசர் சொல்ல தனது தந்தத்தினை ஒடித்து விநாயகர் எழுதி மனிதகுலத்திற்கு அளித்த பொக்கிஷமான மகாபாரத இதிகாசம் நூற்றாண்டுகளினூடே மனித மனங்களில் பல்வேறு வடிவங்களில் பரிணமித்து வந்துள்ளது. கூத்துக் கலைகள், நிகழ்த்து கலைகள், நாடகம், சினிமா என்ற ஊடங்கங்களின் மூலம் கோடான கோடி மக்களின் மனதில் பாரத இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் அழியா வண்ணம் நிலை பெற்றுள்ளன.
மலையாள இலக்கியதத்தில் தலை சிறந்த எழுத்தாளராக வாழ்ந்து கொண்டிருக்கும் வாசுதேவன் நாயர் எழுதிய ரெண்டமூழம் எனும் இரண்டாம் இடம் நாவல், குந்தி தேவியின் இரண்டாவது மகன் பீமனின் பார்வையில் நமக்கு மஹாபாரத கதையினை சொல்கிறது. இந்த இதிகாச கதையை ஆதிமூலமாக கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக எடுப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். வாசுதேவன்நாயர் கதை, திரைக்கதை எழுத பீமனாக புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளது, லட்சோப லட்சம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
ஓம் நமசிவாய..
ReplyDeleteAsking questions are in fact fastidious thing if you are not understanding something entirely, however this paragraph presents fastidious understanding even. gmail log in