2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
அதிகாலைப் பொழுதில் - 15.12.14
கோவில்பட்டியிலிருந்து கிராமத்திற்கு 15 ம் எண்ணுள்ள பேருந்து ஓடுகிறது. கழுகுமலை பேரூராட்சி ஊர் வரை செல்லும். அதிகாலைப் பொழுதில் ஊருக்கு வரும்பொழுது பேருந்தின் ஓட்டுநரை புகைப்படம் எடுத்தது.
மேலப்பட்டியில் பிள்ளையார் கோயிலின் அருகே பாலம் கட்டும் வேலை நடைபெறுவதால், நடுவப்பட்டி வழியாக பேருந்து வந்தது. மைப்பாறை ஊருக்கு அருகிலுள்ள சாலையில் செல்லும்போது எடுத்த புகைப்படம்!
Wednesday, December 17, 2014
கிராமத்தின் கரிசல் காடுகளில் அதிகாலை வேளையில் உலாவச் சென்றபோது - 15.12.14 (திங்கள்)
அந்தோணி அவர்களின் புதல்வர் ரவிகுமார்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களும் காடுகளோடு பிண்ணிப் பிணைந்தவை. காடும், காடு சார்ந்த வாழ்க்கையும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப் போனவை. கிராமத்து மக்களின் குலத்தொழிலும் கூட.
குளக்காட்டாக்குறிச்சி கிராமத்தின் காடுகள், நெல்லை மாவட்டத்தின் தெற்க த்தி கரிசல் மண்ணாக காட்சியளிக்கிறது. இந்த கரிசல் மண்ணில் பருத்தி, உளுந்தம் பயிறு, பாசிப் பயிறு, மக்காச்சோளம், கருது, எள், நிலக் கடலை, எலுமிச்சை, தென்னை என்று வேளாண்மைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படு கிறது.
இந்த வருடம் பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால் வேளாண்மை நல்ல முறையில் செழிப்பாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் வேளாண்மை -யில் பலத்த நஷ்டம். தமிழ்நாடு அரசாங்கம் நெல்லை மாவட்ட விவசாயிகளு க்கு வறட்சி நிவாரண நிதி அளித்தது. இந்த வருடம் நல்ல மகசூல் ஆகப்போவ -தால், 2015 ம் ஆண்டு தை திருநாளை மக்கள் நல்ல மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
சிறு வயதில் இந்தக் காடுகளில் என் வயது சிறுவர்களுடன் ஓடியாடி விளையாடும்போது எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும். இதேபோன்று எண்ணற்ற வெள்ளைக் கொக்குகள், செங்கால் நாரைகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும். இப்போது புல்வெளிகளில் மேயும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இந்தக் காடுகளின் வழியாக செல்லும்போது கரிச்சான் குருவிகளும், சிட்டுக் குருவிகளும் கீச்சு கீச்சு என்று குரலெழுப்பி, எங்களை காட்டுக்குள் வரவேற்பதுபோல் ஒரு உணர்வு தோன்றும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் மட்டும் காட்டினுள் இல்லையென்றால் , காடே சூனியமாகத்தான் காட்சியளிக்கும். ஒவ்வொரு பறவைகளுமே நமது கிராமத்தின் மூதாதையர் -களோடு காட்டின் வயற்பரப்புகளில் வேளாண்மை செய்தபோது உறவாடியவை. இந்தப் பறைவைகளும் நமது கிராமத்தின் உறுப்பினர்கள்தான் என்று நாம் எண்ண வேண்டும். ஏதோ பறவைகள் காட்டில் உள்ளன என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பயிர்களை அழிக்கும் விட்டில் பூச்சிகள், வெட்டுக் கிளிகளை பிடித்துத்தின்று வேளாண்மைப் பயிர்களை காப்பவை சின்னஞ்சிறு கரிச்சான் குருவிகளும், சிட்டுக் குருவிகளும்தான்.
Labels:
வரலாற்று சுவடுகள்
Location:
Kulakattakurichi, India
Subscribe to:
Posts (Atom)