சமீப வருடங்களாக உடல் நலம் குன்றியிருந்த அண்ணன் ராஜுவின் அப்பா ருத்திரப்ப நாயக்கர் அவர்கள் இன்று காலை வேளை சிவபதவி அடைந்தார். அகவை 85 எனச் சொல்லப்படுகிறது. உடன்பிறந்த தம்பி அய்யலுசாமி அவர்கள், கோவில்பட்டி நகரிலுள்ள நீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணி புரிகிறார். அன்னாரது உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும்.
2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Tuesday, October 12, 2004
Saturday, January 3, 2004
கிரிக்கெட் மைதானம்..
கழுகுமலை சாலையிலுள்ள தேசியம்மாளுக்கு சொந்தமான காட்டில் கிரிக்கெட் விளையாட்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. என்னைவிட பத்து வயது மூத்த இளைஞர்கள் சூப்பராக கிரிக்கெட் விளையாடியதை அப்போது வேடிக்கை பார்த்த காளிராஜும், கனகராஜும் சொல்வார்கள். 1995ம் வருடம் தொடங்கி 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தமையால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெரிதாக பயம் எதுவும் இல்லாமல் இருந்தது. ஜெயராமச்சந்திரன் மகன் கண்ணன் அவர்கள், பன்னிரெண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கோவை நகரில் சேரன்மாநகர் செல்லும் சாலையில் அமைந்த ராஜ்ஸ்ரீ மில்லிற்கு வேலைக்குச் சென்றார். தொழிலாளர் வேலை நிறுத்தம், சம்பள பிரச்சினை என ராஜ்ஸ்ரீ மில் நீண்ட நாட்களாக மூடப்பட்டதால் மீண்டும் ஊருக்கு வந்து கொஞ்ச நாட்கள் விவசாயம் செய்து கொண்டிருந்தார். விவசாயத்தில் பெரிதாக ஈடுபாடு எதுவும் இல்லை. ஓசூரில் பணி செய்யும் ராமசாமி அவர்களின் மகன் வரதராஜன் அவர்கள், ஒசூரிலுள்ள டிவிஎஸ் கம்பெனிக்கு செக்யூரிட்டி வேலைக்குச் சென்று நல்லபடியாக இருந்தார். மங்கம்மா அவர்களின் மகனான கணேசன், மத்திய அரசின் BSF படைக்கு தேர்வாகி வேலைக்குச் சென்று எங்களை பிரமிக்க வைத்தார்.
இவர்களுக்கு முந்தைய தலைமுறை இளைஞர்களான பத்மநாபன், கண்ணன் இருவரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று ஊர் மக்களையே வியக்க வைத்தனர். 1980லிருந்து 1985ம் ஆண்டு காலகட்டம் வரையில் பிறந்த எங்களுடைய தலைமுறை பையன்களுக்கு கல்லூரிக்குச் சென்று மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. செவலை மணி என அழைக்கப்படும் அய்யலுசாமி, 1999ம் வருடம் கோவில்பட்டி நகரிலுள்ள லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட எலெக்ட்ரானிக் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் வேலைகள் செய்து அபுதாபி நாட்டிற்கு வேலைக்குச் சென்று நான்கு வருடங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக திரும்பினார். காளிராஜ், கண்ணன் போன்ற பையன்கள் தமிழ்நாடு அரசின் காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்தனர். ஆறு மாதம் காலம் காவல்துறை டிரைனிங்கிற்கு பிறகு காளிராஜ் ஏட்டாக, கண்ணன் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தனர்.
1999ம் வருடம் இளங்கலை கணிப்பொறி படிப்பில் நான் சேர்ந்த பிறகு தேசியம்மாளின் காட்டில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு சுத்தமாக நின்று போனது. காட்டிற்கு நடுவில் உள்ள கரண்ட் கம்பத்திற்கு மட்டுமே நாங்கள் ஓடியாடி விளையாடியது நன்றாகத் தெரியும்.