Saturday, August 22, 2015

காளியம்மன் கோவில் திருவிழா.. 2015ம் ஆண்டு, மே 25 திங்கள்கிழமை

இந்த ஆண்டின் காளியம்மன் கோவில் திருவிழா ஆன்மீகப் பேராற்றலின் அனுபூதியாக, தெய்வீகத்தை தந்தது. கோடை விடுமுறை, பக்கத்துல இருக்குற பெரும்பாலான கிராமங்களில் கோயில் திருவிழா நடந்ததால உறவினர்கள் கூட்டத்தை அதிகமா பார்க்க முடியலை. ஒவ்வொரு கிராமங்கள்லயும் இறைவன், கடவுள் மேல மக்கள் வச்சிருக்கிற நம்பிக்கை அமானுஷ்யமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே முன்னோர்கள் ஏற்படுத்துன தெய்வ நம்பிக்கை நடைமுறைகள். அது இன்னைக்கும் கட்டுறுதி குலையாம பாரம்பரியமா நடந்துகிட்டே வருது. கிராமங்கள்ல நடக்குற கோயில் திருவிழா மூலமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க முடியுது. தீய சக்திகள்கிட்ட இருந்து மக்களை காக்குற வலிமை தெய்வங்களுக்கு உண்டு என்ற வலிமையான நம்பிக்கைதான், சிலை வழிபாடு.. எப்படி நம்ம பெற்றோர்கள் முன்னோர்களோட உருவங்களை புகைப்படங்களில் கண்டு, பார்த்து வழிபாடு செய்யுறமோ, கடவுளோட உருவத்தை சிலைகளின் மூலமாக பாக்குறோம், வழிபாடு செய்கிறோம்..


காளியம்மன் கோவிலின் முன்பு ஊர் மக்கள் கூடி நின்று நையாண்டி மேளத்தை ரசிக்கின்றனர். புகழ்பெற்ற சினிமா பாடல்கள், கடவுள் பக்தி பாடல்களை நையாண்டி மேளம் வாசிப்பவர்களுடன் நாதஸ்வரம் இசைத்துப் பாடுகையில் கேட்பவர்களை பரவசம் கொள்ளச் செய்வதை காண முடியும்.



பால்ய நண்பன் முருகனின் அப்பா.. கையில் சூலாயுதம் ஏந்தி ஒவ்வொரு வருடம் நடக்கும் பொங்கல் திருவிழாவில் எல்லைச் சாமி என அழைக்கப்படும் கருப்பசாமியின் வேடம் அணிந்து உக்கிரமமாக ஆடுவதை காண்பதற்கே பரவசமாக இருக்கும். சிகை அலங்காரம் செய்வதற்கான அணிகலன், ஆடைகள் பக்கத்து ஊரான சங்கரன்கோவிலிலிருந்து வாங்கி வருவார்கள். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலின் முன்புறம் அமைந்த சாலையில் சாமி கட்டி ஆடுவதற்கான ஆடைகள், பொருட்கள் விற்கப்படுவது, சிறப்பம்சமாகும்.  




கடவுள் காளியம்மனின் தேர் ஊருக்குள் கிளம்பிச் செல்லும் வேளையில்..




ஜோசியர் ராஜேந்திரன் அவர்கள்.. ஆண்டுதோறும் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் அக்கினி சட்டி ஏந்தி வருவார். புதிய நூற்றாண்டு தொடங்கிய 2000ம் ஆண்டிலிருந்து சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளாக அக்கினி சட்டி எடுத்து வருகிறார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் சென்று ஜாதகம் பார்த்து அருள்வாக்கு சொல்லி வருவார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் பிரபலமான ஜோதிடராக இருக்கிறார். இவருடைய குடும்பம், கானப்பாடி கம்ம குலம். குலதெய்வம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் கோவில்தான். ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவிலிலிருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் 2.4 கிலோ மீட்டர்.


எனது குடும்பத்தின் குலதெய்வமும் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவில்தான். காளியம்மனின் உருவச் சிலையும், ஸ்ரீநாரணம்மாளின் உருவச் சிலையும் கோவில் திருவிழாவின்போது உருவ அமைப்பில் ஒன்றுபோல இருப்பதைக் கண்டு வியப்பாக பார்த்து.. ஓம் சக்தி.. பராசக்தி என்று நூறு முறை மந்திரம் செல்லுகையில் அந்த ஆண்டு முழுவதும் நினைத்த நல்ல காரியங்கள் தங்கு தடையில்லாமல் நடப்பதைக் கண்டு மெய்சிலிர்க்க வைக்கும்.










காளியம்மன் கோவிலின் அருகில் அமைந்த விநாயகர் கோவில்.. காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் தினமன்று.. விநாயகர் கோவிலின் முன்பு ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்..


ஜோசியர் ராஜேந்திரன் அவர்கள்.. ஆண்டுதோறும் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் அக்கினி சட்டி ஏந்தி வருவார். புதிய நூற்றாண்டு தொடங்கிய 2000ம் ஆண்டிலிருந்து சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளாக அக்கினி சட்டி எடுத்து வருகிறார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் சென்று ஜாதகம் பார்த்து அருள்வாக்கு சொல்லி வருவார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் பிரபலமான ஜோதிடராக இருக்கிறார். இவருடைய குடும்பம், கானப்பாடி கம்ம குலம். குலதெய்வம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் கோவில்தான். ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவிலிலிருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் 2.4 கிலோ மீட்டர்.
 

காளியம்மன் கோவிலின் முன்பு.. முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவார்கள். தந்தனன்னே.. தந்தனன்னே.. தானனே.. பாடலின் வரிகள் இப்படி தொடங்கிச் செல்லும். கேட்பதற்கே பக்தி பரவசம் கொள்ளச் செய்யும்.






காளியம்மன் கோவிலின் முன்பு.. முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவார்கள். தந்தனன்னே.. தந்தனன்னே.. தானனே.. பாடலின் வரிகள் இப்படி தொடங்கிச் செல்லும். கேட்பதற்கே பக்தி பரவசம் கொள்ளச் செய்யும்.




காளியம்மன் கோவில் திருவிழா தொடங்குதற்கு ஒரு வாரம் முன்பு தயாரிக்கப்படும் முளைப்பாரி. திருவிழா நாளன்று.. ரம்மியமாக காட்சி அளிக்கும்.




குருவிகுளம் யூனியன் மாவட்டக் கவுன்சிலராக பத்து ஆண்டுகள், குருவிகுளம் யூனியன் சேர்மனாக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த விஸ்வாமித்திரன் அவர்களின் வீட்டின் முன்பு காளியம்மனின் சப்பரம் வந்து நிற்கும் வேளையில்.. 









Monday, May 18, 2015

காளியம்மன் கோயில் திருவிழா - மே 2015


சாமி! ஊரு கூட்டம். வீட்டுக்கு ஒரு ஆளு காளியம்மன் கோயிலுக்கு வந்துருங்க சாமியோ! இப்படி ஊருக்குள்ள பகடை கருப்பசாமியோட அப்பா தண்டோரா போடுவாரு. கோயில் திருவிழாவாகட்டும், ஊர் பொதுக் கூட்டமாகட்டும் பகடை ஐயா ஊருத் தெரு வழியா சொல்லிக்கிட்டு போவாரு. இப்படி இந்த வருஷம் நடக்கப்போகுற காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊருக்குள்ள தண்டோரா போட்டுருக்காங்க. வெளியூர்ல குடியிருக்கிற ஊர் மக்கள் கலந்துக்குற மாதிரி கோடை விடுமுறையில காளியம்மன் கோயில் விழா நடக்குது. இந்த மாதம் (மே மாதம் 26, 27 தேதிகள்ல) காளியம்மன் கோயில் தேரோட்டமும், மஞ்ச நீராட்டு விழாவும் நடக்கப்போகுது. ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க இளைஞர்களின் சார்பில் வேண்டுகிறேன்..! 

Tuesday, March 10, 2015

சினிமாப் படத்தின் கதையினை பேசுதல்..

ஒரு பெண் என்பவள் பிரசவ வலியின் வேதனையுடன் குழந்தையை பெற்றெடுத்த பின்பு அந்த குழந்தையின் முகத்தினை பார்க்கும் நொடிப்பொழுதில் வேதனைகள் அனைத்தையும் மறந்து முகத்தில் பிரகாசமான மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனது அம்மாவின் கருவறையில் நான் குழந்தையாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் நடித்த படங்களின் கதையினை பத்து, பதினைந்து நிமிடங்களில் கருவிலுள்ள என்னிடம் பேசியதாக எட்டு வயது சிறுவனாக படித்து கொண்டிருந்த 1990ம் வருடத்தில் எனது அப்பா சொன்னார். துவாபர யுகதத்தில் ஸ்ரீகிருஸ்ணரின் உடன் பிறந்த தங்கை சுபத்திரையின் கருவில் அர்ஜுனனின் மகன் அபிமன்யூ கருவாக வளரும்போது, போர்க்களத்தில் ஒரு வீரன் போர் செய்கையில் எதிரி நாட்டுப் படைகள் சக்கர வியூகம் அமைத்து போர் செய்கையில் எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றி ஸ்ரீகிருஸ்ணர் பேசிக்கொண்டே இருந்த சமயமாக, இந்த சக்கர வியூகத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்பதை சொல்லுவதற்கு முன்பாக அர்ஜுனனுடன் பேசிக்கொண்டே வேறு ஒரு விசயத்தில் கவனம் செலுத்தியதால் கருவிலிருந்த அபிமன்யூவுக்கு தெரியாமல் போனதாக மஹாபாரத இதிகாசத்தின் மூலமாக சொல்லப்படுகிறது. 1964ம் வருடம், ஜனவரி மாதத்தின் தை திருநாளில், பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கர்ணனின் கேரக்டரில் நடித்து வெளியான @கர்ணன் படத்தினை பற்றிய காட்சிகளின் உரையாடல்கள் முழுவதையும் ஆறு மாதம் தொடங்கி எட்டு மாதக் குழந்தையாக கருவில் இருந்தபோது பேசியதாக, 1994ம் வருடத்தின் காலகட்டத்தில் நண்பகல் வேளையாக, என்னிடம் தற்செயலாக பேசினார். 

என்னுடைய அப்பா ராமகிருஸ்னண் அவர்களுக்கு பதினான்கு வயதாக இருந்தபோது ஈஸ்ட்மேன் கலரில் பிரம்மாண்டமாக வெளியான @கர்ணன் படத்தினை, இருபத்தி இரண்டு(22) வயதில் கோவில்பட்டி நகரின் பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையிலுள்ள ராமசாமி திரையரங்கு சென்று பார்த்த பின்பு இரண்டு மாத கால இடைவெளியில் நான்கு முறை @கர்ணன் படத்தினை பார்த்ததாக சொன்னார். மஹாபாரத கதையினை சிறுவயதிலே முழுமையாக படித்திருந்த எனது அப்பா ராமகிருஸ்ணன் அவர்களுக்கு @கர்ணன் சினிமாப் படம் பார்த்த பிறகு மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினை எனது தாயின் கருவறையில் குழந்தையாக இருந்த என்னிடமும் தாக்கத்தை உருவாக்கியதை அறிய முடிந்தது. 

பிலிம் ரோலிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு புத்தம் புதிய பொலிவுடன் 2014ம் வருடத்தில் திரையரங்கில் ரிலீசான @கர்ணன் படத்தினை, கோவை நகரில் வசித்தபோது பூமார்க்கெட் அருகிலுள்ள தர்சனா திரையரங்கில் கர்ணன் படம் ரிலீசானதை அறிந்து நண்பன் குமரேசனுடன் சென்று நண்பகல் காட்சியாக சென்று பார்த்தபோது, கருவில் இருந்தபோதே கேட்ட "கர்ணன்" படத்தின் காட்சிகளின் அமைப்பினை நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் பார்த்தது போன்ற உணர்வுகள் உருவானதைக் கண்டு மெய்சிலிர்க்க வைத்தது. @கர்ணன் போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தினை டிவியில் எத்தனை முறை பார்த்தாலும் உருவாகாத தாக்கம், பெரிய திரையில் தற்போது உள்ள டிஜிட்டல் சவுண்டு தொழில்நுட்பம் மூலம் பார்க்கையில், படத்தின் ஒரிஜினாலிட்டியை நூறு சதவிகிதம் அகத்தில் உணர முடிந்தது, ஒரு ஆச்சரியமே. 

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் நடித்த படங்களின் கதையிலிருந்து திரில்லிங்கான விசயங்களை சுவராஸ்யமான முறையில் சிற்சில சமயங்களில் சொல்லுவதை எனது அப்பா ஒரு நல்ல விகடகவிபோல பழக்கமாக வைத்திருந்ததை கண்டு ஆச்சரியமாக இருந்தது. மதுரை நகரிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு 1982ம் வருடத்தில் எனது பிரசவத்திற்காக அம்மாவினை அப்பா அழைத்து வந்திருந்தபோது, பருவமழை கனமழையாக பெய்து கொட்டும் மழையுடன் மருத்துவமனைக்குள் சென்று மூன்று நாட்களில் தாயின் கருவிலிருந்து குழந்தையாக பிறந்ததாக எனது அம்மா சொல்லக் கேட்டு அறிந்து கொண்டது. 

சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து எனும் தலைப்புகளில் இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களான ராமயாணம், மஹாபாரதம் கதையினை பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக புத்தகமாக எழுதி பெரும் புரட்சியினை செய்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி அவர்களின் பெயரினைக் கொண்ட ராஜாஜி அரசு மருத்துவமனையில் நான் பிறந்த நிகழ்வு, மதுரை நகருக்கு வரும்போதெல்லாம் பசுமையான நினைவுகளாக ஞாபகத்திற்கு வந்து செல்லும். 

Thursday, January 15, 2015

தை திருநாள் வாழ்த்துக்கள்!

குளக்கட்டாக்குறிச்சி கிராமத்து மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள நமது கிராமத்து மக்களுக்கும், கிராமத்து வலைப்பூவின் வாசகர்களுக்கும், 2015 ம் வருடத்தின் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்..!