Tuesday, January 21, 2014

வேளாண்மை சாகுபடி பயிர்கள்..

கடந்த வருடத்தில்(2013) கடைசியாக பெய்ய வேண்டிய ஒரு பருவ மழை பெய்யாமல் போன சூழலில் வேளாண்மை சாகுபடி பெரிய நஸ்டத்தை சந்தித்த வேளை, 2014ம் வருடம் வருகை தந்த தை திருநாளில் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி கிராமமே அமைதியாக இருந்தது. 

2014, ஜனவரி 13 அன்று காலை வேளை எடுத்த புகைப்படங்கள்..


சூரியகாந்தி பயிரிடப்பட்டு நன்றாக வளர்ந்திருந்தது.


பருத்தி பயிரிடப்பட்டு காய்கள் உற்பத்தியான நடுநிலை பருவம்.











இரண்டு வண்ணத்து பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு ஒன்று சேர்ந்து இருந்த வேளை, புகைப்படம் எடுக்கையில் பறந்து செல்லாது அமைதியாக இருந்து போஸ் கொடுத்தது.

Friday, January 10, 2014

2014 ம் ஆண்டின் தை திருநாள் வாழ்த்துக்கள்

நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்து மக்களுக்கும்,உலகெங்கும் உள்ள நமது கிராமத்து மக்களுக்கும் 2014 ம் ஆண்டின் தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

Monday, January 6, 2014

தென்னாடுடைய இறைவா - நம்மாழ்வாரே போற்றி!!

நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ,அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்க தொடங்குகிறோம் - கோ.நம்மாழ்வார்

இயற்கையை காத்து நின்ற தவப்புதல்வர் 
இயற்கையோடு கலந்தார்...
இயற்கைக்கு மரணம்... 


பச்சை விரித்த புல்வெளிகள்
குடைவிரித்து நிழல் கொடுக்கும் நெடுமரங்கள்
அலை அடிக்கும் குளம் குட்டைகள்
சின்னஞ்சிறு மீன்கள் நீந்தும் சிற்றோடைகள்
நான் படித்து படித்து மனப்பாடம் செய்த நதிகள்

அன்புக்குரியவர்களே
எங்கேனும் பார்த்தால் எனக்கொரு தகவல் தாருங்கள்
நோக்குமிடம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்
குடித்துப் போட்ட நெகிழிக் குவளைகள்

பூச்சிக் கொல்லிகள் என்ற விசத்தை
உணவு என்று நம்பி உண்டு
மாண்டு போனது விவசாயிகளின் நண்பன்
மண்புழு

பாலிடால் குடித்துக் குடித்து எனது
செங்காடு செத்துப் போனது
பாலித்தீன் பைகளால்
பூமியை மலடு ஆக்கினேன்
நிலத்தின் கர்ப்பப்பையில்
என்டோசல் பானைத் தூவித்தூவி
எனது உயிர் மண்ணை கொலை செய்தேன்...

கொஞ்சமும் குறையவில்லை எனது நுகர்பொருள் வெறி
காசு பணம் துட்டு மணி மணி
இது சினிமா பாட்டில்லை
கார்பரேட் வியாபாரியின் ஆத்திச்சூடி

நிலம் நீர் காற்று இவற்றைக்
கார்பன் துகள்களால் கரியமில வாயுவால்
மாசுபடுத்தினேன்
குளிர்ச்சி குடித்து வெப்பம் துப்பினேன்
ஆறு ஏறி குளங்களை ஆக்கிரமித்தேன்

விளைவு என்ன ஆயிற்று?
எத்தனை எத்தனை புதுப் புது நோய்கள்
பூமிக்கும் மனிதனுக்கும் வந்தன மருந்தறியாப்
புற்று நோய்கள்
உரக்கிடங்குகள் தான் இன்று மெய்யான
சவக்கிடங்குகள்

இவ்வாறு - நரகத்தின் வாசல் அகலத் திறந்து வைக்கப்பட்ட போது
தோன்றிய சூழல் நட்சத்திரம்
நம்மாழ்வார்
இவர் மீட்டுக் கொடுத்த சொற்கள்
இயற்கை மேலாண்மை

உலகக் கார்பரேட் சாத்தான்களின் ஓலத்திற்கிடையே
நாடி நரம்பு ரத்தம் சதை பேச்சு மூச்சு
எல்லாம் இயற்கை இயற்கை என்பது தான்
நம்மாழ்வார் எழுதிக் கொடுத்த
புத்தம் புதிய வேளாண் வேதம்

இந்த தாடிக் கிழவர் இன்று இறந்து போனார்
நமது உயிர் எழுத்துகளால் கண்ணீர் ததும்பும் சொற்களால்
காணிக்கைப் பொருள்களால்
நன்றி செலுத்த முடியுமா?

எப்படி அஞ்சலி செலுத்துவது?
எனது தமிழ் இன்று ஏழையாக நிற்கிறது?
ஒன்று செய்வோம்
கடவுளின் படத்துக்குப் பக்கத்தில்
நம்மாழ்வார் படத்தை வைப்போம்!!

என்நாடுடைய இயற்கையே போற்றி என்று
தேசத்து மண்ணின் நலத்திற்காவே வாழ்ந்து
மண்ணிலேயே உயிர்நீத்தவரே!!
மக்களின் இதயங்களில் நீங்கள்
விதைத்து சென்றுள்ள வேளாண்மை எனும்
வேள்வித் தீ - இந்திய தேசமெங்கும்
நெருப்பாக பற்றி எரியும்...
தமிழக மண்ணின் வீர இளைஞர்கள்
நீங்கள் துவக்கி வைத்த வேள்வியை
இந்த 21 ம் நூற்றாண்டில் தீ ஜுவாலையாக
பற்றி எரியச் செய்வார்கள்...
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா(நம்மாழ்வாரே) போற்றி!!