கட்டுரை - எனது இந்தியா(ஜூனியர் விகடன்) - எஸ்.ராமகிருஷ்ணன்
1054 ம் ஆண்டு சோழர்காலக் கல்வெட்டு,வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து
கொண்டதைக் குறிப்பிடுகிறது.அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு' அவளை உட்படுத்தினான்.அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள்.இதற்க்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.
வரி வசூலிக்கும்போது,சுடுசொற்களைப் பயன்படுத்துவதை 'அரவதண்டம்' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.'கடமைக்காக' வெள்ளாளரை சிறைபிடிக்கக் கூடாது' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதனால்,ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது.ஜமீன்தார் முறை,இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை.
அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய
ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்' என்ற படைத் தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார்.விஸ்வநாத நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சலங்குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரி த்தார்.'பாலாமு' என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு' என்றால் 'ராணுவ முகாம்' எனப் பொருள்.பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல்,போர்க்காலங்களில் நாயக்கர்களுக்கு படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி.தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல இல்லை.சில பாளையங்கள் சிறியதாகவும்,சில பெரியதாகவும் இருந்தன.தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு,பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்பட்டன.புதிய ஸ்தானாபதிகள் உருவாகினர்.அதன் தொடர்ச்சியாகவே,ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்
களால் உருவாக்கப்பட்டனர்.1799 -ல் தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார்
முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமான வர்கள் என்று வரையறுக்க முடியாது.சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்து க்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர்.கலை,சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர்.ஆனால்,பொதுவாக
ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் அவர்களின் வரி வசூல்
செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும்
கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.
தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி' ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது.அதை,லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள்.மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார்.மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆவ்யு செய்த வர்கீஸ்
ஜெயராஜ் தமது ஆய்வு நூலில்,வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது,ஐந்து தோல் பட்டைகளைக் கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது.இவ்வாறு அடிப்பதால்,அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும்.இந்த சவுக்கடிக்கு பயந்து மக்கள் வரி செலுத்தினர்.அதுபோலவே,தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது,பெண்களை தூக்கிச் செல்வது,தானியங்களை திருடுவது,எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர்.ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது.நில வரி பாக்கிக்காக குடியானவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வர்.அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வரமாட்டாகள்.இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஓரணா(ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.
திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடதவர்கள் காதில் பூட்டுவதற் கென்றே 'இயர்லாக்' என்ற கருவியை வைத்திருந்தனர்.இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால்,அதன் கணம் தாங்க முடியாமல் காதை இழுத்துத்
துன்புறுத்தும்.ஒரு கட்டத்தில் பளு தாங்காமல்,காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் களமாக விளங்கியது
வங்காளம்.ஆகவே,நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே,ஜமீன்தாரி முறையை அமல்படுத் தியது.இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே,இந்தியா முழுவதும் அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர்,சர்தார்,மாலிக்,சவுத்திரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர்.இவர்கள்,நிலவரி
வசூல்செய்வதுடன்,உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால்,விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர்.ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டு கொள்ளவே இல்லை.ஆகவே,இந்த விசுவாசிகள், இந்தியாவை விட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர்.
தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்களுக்கு 'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
தார்பங்கா ஜமீன்தார், இந்தியாவி -லேயே மிக அதிக வருவாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல் செய்வதில் முதல் இடம் பெற்றிருந் -தார்.தார்பங்கா,வட பீகாரில் உள்ளது.அதன் ஜமீன்தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதினார்.இவரது
ஆளுகையில் 4495 கிராமங்கள் இருந்தன.தார்பங்கா ஜமீன்,2400 சதுர மைல் பரப்புடையது.துக்ளக் காலத்திலயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டையும் நீடித்தன.அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார்.வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர்.அவர்களைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யவும்,வரிவசூலை முறையாக மேற்கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார்.அதன்படி,பண்டிட் சக்கரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை,இந்தப் பகுதியின் ஆட்சியா -ளராக நியமனம் செய்தார்.மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்பங்காவை ஆட்சிசெய்தனர்.இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர்.இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.
தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர்.தார்பங்கா ஜமீன்தார்கள்
மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால்,அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர்.இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம்,வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்க -ளுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர்.1685 - ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.769287.இது மிகப் பெரிய வருவாய்.
1880 - 1881 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500.இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188.அதாவது நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.
தார்பங்கா ஜமீன்தார்களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.மேற்கத்தியக் கல்வியும் கலாச்சாரமும் கொண்டவர்களாக
வளர்க்கப்பட்ட அவர்கள்,பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்துவிடுமோ என்று அச்சம்கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.காங்கிரஸ் மாநாடு
நடத்துவதற்கு உதவி செய்தனர்.ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக
இருந்தது.
நேரடி வாரிசுகள் இல்லாமல் போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில்
அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கிலாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன.இந்த வழக்கு -களில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை
மாகாணத்தை பொருத்தவரை,அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது.1911 - ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை,9,78,3,167 ரூபாய்.1946 - ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது.அந்தக் கமிட்டி,1948 - ல் தனது ஆய்வறிக்கையை சமர்பித்தது.1950 - ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.ஆனாலும்,அது சார்ந்த வழக்குகள்,நிலப்பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
வரலாறு என்பது கடந்த காலமில்லை.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூபசக்தி.வரலாற்றை புரிந்துகொள்வதும்,அதன் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். அதற்கான எத்தனிப்பாகவே "எனது இந்தியா" தொடரை எழுதி வந்தேன். வரலாறு என்பது பெருங்கடல்.அதன் ஊடகப் பயணித்து நான் கண்டறிந்த உண்மைகளில் சிலவற்றை இந்தத் தொடரின் வழியே வெளிப்படுத்த முடிந்தது சந்தோசமான அனுபவம். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது முடிவில்லாத தேடல்.உள்ளங்கையில் அள்ளிய கடலைப் போல என் அளவில் கற்றுக் கொண்ட வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.இன்னொரு தருணத்தில் இன்னொரு பயணத்தில் மீண்டும் நாம் வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் என்று கனத்த இதயத்துடன் 52 வது தொடர் வரைக்கும் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தம் படைத்து வாசகர்களிடமிருந்து விடைபெற்றார்.தமிழ் உலகின் நட்சத்திர எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜூனியர் விகடன் தொடரில் தமிழ் சமூகத்திற்கு புதியதொரு வரலாற்று தொடரை அறிமுகப் -படுத்தினார். இவரைப் போன்ற எழுத்தில் வல்லமை படைத்த ஜாம்பவானை எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்த விகடன் பத்திரிக்கைக்கு கோடான கோடி இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
1054 ம் ஆண்டு சோழர்காலக் கல்வெட்டு,வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து
கொண்டதைக் குறிப்பிடுகிறது.அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு' அவளை உட்படுத்தினான்.அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள்.இதற்க்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.
வரி வசூலிக்கும்போது,சுடுசொற்களைப் பயன்படுத்துவதை 'அரவதண்டம்' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.'கடமைக்காக' வெள்ளாளரை சிறைபிடிக்கக் கூடாது' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதனால்,ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது.ஜமீன்தார் முறை,இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை.
அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய
ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்' என்ற படைத் தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார்.விஸ்வநாத நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சலங்குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரி த்தார்.'பாலாமு' என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு' என்றால் 'ராணுவ முகாம்' எனப் பொருள்.பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல்,போர்க்காலங்களில் நாயக்கர்களுக்கு படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி.தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல இல்லை.சில பாளையங்கள் சிறியதாகவும்,சில பெரியதாகவும் இருந்தன.தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு,பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்பட்டன.புதிய ஸ்தானாபதிகள் உருவாகினர்.அதன் தொடர்ச்சியாகவே,ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்
களால் உருவாக்கப்பட்டனர்.1799 -ல் தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார்
முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமான வர்கள் என்று வரையறுக்க முடியாது.சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்து க்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர்.கலை,சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர்.ஆனால்,பொதுவாக
ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் அவர்களின் வரி வசூல்
செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும்
கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.
தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி' ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது.அதை,லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள்.மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார்.மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆவ்யு செய்த வர்கீஸ்
ஜெயராஜ் தமது ஆய்வு நூலில்,வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது,ஐந்து தோல் பட்டைகளைக் கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது.இவ்வாறு அடிப்பதால்,அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும்.இந்த சவுக்கடிக்கு பயந்து மக்கள் வரி செலுத்தினர்.அதுபோலவே,தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது,பெண்களை தூக்கிச் செல்வது,தானியங்களை திருடுவது,எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர்.ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது.நில வரி பாக்கிக்காக குடியானவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வர்.அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வரமாட்டாகள்.இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஓரணா(ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.
திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடதவர்கள் காதில் பூட்டுவதற் கென்றே 'இயர்லாக்' என்ற கருவியை வைத்திருந்தனர்.இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால்,அதன் கணம் தாங்க முடியாமல் காதை இழுத்துத்
துன்புறுத்தும்.ஒரு கட்டத்தில் பளு தாங்காமல்,காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் களமாக விளங்கியது
வங்காளம்.ஆகவே,நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே,ஜமீன்தாரி முறையை அமல்படுத் தியது.இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே,இந்தியா முழுவதும் அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர்,சர்தார்,மாலிக்,சவுத்திரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர்.இவர்கள்,நிலவரி
வசூல்செய்வதுடன்,உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால்,விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர்.ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டு கொள்ளவே இல்லை.ஆகவே,இந்த விசுவாசிகள், இந்தியாவை விட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர்.
தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்களுக்கு 'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
தார்பங்கா ஜமீன்தார், இந்தியாவி -லேயே மிக அதிக வருவாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல் செய்வதில் முதல் இடம் பெற்றிருந் -தார்.தார்பங்கா,வட பீகாரில் உள்ளது.அதன் ஜமீன்தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதினார்.இவரது
ஆளுகையில் 4495 கிராமங்கள் இருந்தன.தார்பங்கா ஜமீன்,2400 சதுர மைல் பரப்புடையது.துக்ளக் காலத்திலயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டையும் நீடித்தன.அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார்.வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர்.அவர்களைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யவும்,வரிவசூலை முறையாக மேற்கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார்.அதன்படி,பண்டிட் சக்கரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை,இந்தப் பகுதியின் ஆட்சியா -ளராக நியமனம் செய்தார்.மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்பங்காவை ஆட்சிசெய்தனர்.இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர்.இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.
தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர்.தார்பங்கா ஜமீன்தார்கள்
மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால்,அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர்.இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம்,வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்க -ளுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர்.1685 - ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.769287.இது மிகப் பெரிய வருவாய்.
1880 - 1881 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500.இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188.அதாவது நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.
தார்பங்கா ஜமீன்தார்களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.மேற்கத்தியக் கல்வியும் கலாச்சாரமும் கொண்டவர்களாக
வளர்க்கப்பட்ட அவர்கள்,பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்துவிடுமோ என்று அச்சம்கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.காங்கிரஸ் மாநாடு
நடத்துவதற்கு உதவி செய்தனர்.ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக
இருந்தது.
நேரடி வாரிசுகள் இல்லாமல் போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில்
அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கிலாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன.இந்த வழக்கு -களில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை
மாகாணத்தை பொருத்தவரை,அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது.1911 - ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை,9,78,3,167 ரூபாய்.1946 - ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது.அந்தக் கமிட்டி,1948 - ல் தனது ஆய்வறிக்கையை சமர்பித்தது.1950 - ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.ஆனாலும்,அது சார்ந்த வழக்குகள்,நிலப்பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நன்றி - எழுத்தாளர்-எஸ்.ராமகிருஸ்ணன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------வரலாறு என்பது கடந்த காலமில்லை.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூபசக்தி.வரலாற்றை புரிந்துகொள்வதும்,அதன் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். அதற்கான எத்தனிப்பாகவே "எனது இந்தியா" தொடரை எழுதி வந்தேன். வரலாறு என்பது பெருங்கடல்.அதன் ஊடகப் பயணித்து நான் கண்டறிந்த உண்மைகளில் சிலவற்றை இந்தத் தொடரின் வழியே வெளிப்படுத்த முடிந்தது சந்தோசமான அனுபவம். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது முடிவில்லாத தேடல்.உள்ளங்கையில் அள்ளிய கடலைப் போல என் அளவில் கற்றுக் கொண்ட வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.இன்னொரு தருணத்தில் இன்னொரு பயணத்தில் மீண்டும் நாம் வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் என்று கனத்த இதயத்துடன் 52 வது தொடர் வரைக்கும் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தம் படைத்து வாசகர்களிடமிருந்து விடைபெற்றார்.தமிழ் உலகின் நட்சத்திர எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜூனியர் விகடன் தொடரில் தமிழ் சமூகத்திற்கு புதியதொரு வரலாற்று தொடரை அறிமுகப் -படுத்தினார். இவரைப் போன்ற எழுத்தில் வல்லமை படைத்த ஜாம்பவானை எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்த விகடன் பத்திரிக்கைக்கு கோடான கோடி இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...