1996ம் வருடம் ஜூன் மாதம் தொடங்கி 1997ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளி மாணவர்களாகிய நாங்கள் எழுதினோம்.
**செந்தில்குமார்.. வலைப்பூ உருவாக்கம்.. படிப்பு: கோவில்பட்டி
**ராஜேஸ்வரி.. படிப்பு: கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி..
**ராஜேஸ்வரி.. படிப்பு: கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி..
**கனகராஜ்.. படிப்பு: கழுகுமலை
**மாரிக்காளை.. படிப்பு: அரசு உயர்நிலை பள்ளி, மைப்பாறை
**ராணியம்மாள்.. படிப்பு: கழுகுமலை
எனக்கு நினைவு தெரிந்து மேலே குறிப்பிட்ட ஐந்து பேரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினோம். கனகராஜ் விளையாட்டு போட்டிகளில் கெட்டிக்கார பையன் என்பதால் இந்திய நாட்டின் ராணுவத்திற்கு தேர்வாகி பணிக்குச் சென்றார். எனது அன்புச் சகோதரி, நானும் கழுகுமலை ஊரில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடங்கினோம். மாடத்தியின் மகனான மாரிக்காளை கோவில்பட்டி ஊரிலுள்ள பலசரக்கு கடையில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் பல வேலைகளை செய்தான்.
மூன்று ஆண்டுகள் முடிந்தால் புதிய நூற்றாண்டு தொடங்க உள்ள சரித்திர நிகழ்வினை பார்க்க, உலகிலுள்ள கோடான கோடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.